Posts

Showing posts with the label ஆசிரியர்நாள் வாழ்த்து _ கவிதை

ஆசிரியர் நாள் வாழ்த்து

Image
              ஆசிரியர் நாள் வாழ்த்து  முதலெழுத்தைச் சொல்லித் தர  முதன்முதலாய் எம் கரம்பற்றி   முன்னங்கைத் தொட்டழுத்தி  முத்தான கையெழுத்தை  முன்னறிமுகம் செய்து வைத்து  முத்தாய்ப்பாய்ப் பேசிவிட  முனைந்து பல பயிற்சி தந்து  முன்னிலவு  உருவம் காட்டி  முழு உலகையும் காட்சியாக்கி  முன்பின் நிகழ்வுரைத்து  முன்னேற்றப்பாதை வகுத்தளித்து  முன்னணியில் யாம் நிற்றல் கண்டு  முகமெல்லாம் பூரிப்பால் மலர்ந்து  முட்டிநிற்கும் வானம் எட்டும்வரை  முதற்படியில் நின்று அண்ணாந்து பார்த்து  முழுமனதாய் எம்மை வாழ்த்தி நிற்கும்  முதல்நிலை ஆசிரிய பெருமக்களுக்கு  முதல் வகுப்பு மாணவியின் வணக்கமும் வாழ்த்தும்!