தெய்வம் தொழாஅள் கொழுநன்.... .....
தெய்வம் தொழாஅள் கொழுநன்..... " தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை " குறள் : 55 தெய்வம் - கடவுள் தொழாஅள் - தொழாதவள் கொழுநன் - கணவன் தொழுது - வணங்கி எழுவாள் - எழுந்திருப்பவள் பெய் - பொழிவாயாக என - என்று சொல்ல பெய்யும் - பொழியும் மழை - மழை தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயில் எழுகிறவள் பெய் என்று சொல்ல மழை பெய்யும். விளக்கம் : இல்லற மாண்பை வலியுறுத்த வந்த வள்ளுவர் கற்பெனும் திண்மை கொண்ட பெண் கட்டளையிட இயற்கை கடந்த நிகழ்வுகளும் நிகழ வாய்ப்புள்ளது என்பதை இந்தப் பாடலின் மூலம் கோடிட்டுக் காட்டியுள்ளார். வள்ளுவர் எந்த தெய்வத்தையும் வணங்க வேண்டாம். கணவனை மட்டுமே தொழுதால் போதும் என்று சொல்லிவிட்டாரா ? இப்படி ஒரு கேள்வி உள்ளுக்குள் எழாமல் இல்லை. அது எப்படி திருவள்ளுவரால் சொல்லமுடியும் ? வள்ளுவர் கடவுள் வாழ்த்து எழுதும்போது, " கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" என்று சொல்லியிருக்கிறாரே. அதாவது கடவுளின்...