வாழிய நிலனே
வாழிய நிலனே காலையில் கைபேசியைத் திறந்ததும் கண்கள் முன்னர் வந்து கவின்மிகு காட்சிகளை விரிய வைத்து வாழ்த்துச் செய்திகள் வரிசை கட்டி நிற்கும். இந்த வாழ்த்துகள் யாருக்காக? எதற்காக? நட்புக்காக இருக்கலாம். உறவுக்காக இருக்கலாம். வியாபார தொடர்ர்புகள் அறுந்து போகாமல் இருப்பதற்காக இருக்கலாம். ஏதோ ஒரு ஆதாரம் கருதிதான் நமது வாழ்த்துகள் இருக்கும். இவர்களால் மட்டும் தான் நாம் பலன் பெறுகிறோமா? உயிருள்ளவ உயிரற்றவை என்று எத்தனையோ வழிகளில் பயன் பெற்றதால்தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த உயிர் பெற்றோர் கொடுத்தது. அதன் பின்னர் நாம் உயிர் வாழத் தேவையான அத்தனைப் பொருட்களையும் தருவது நிலமும் அதில் உயிர்வாழும் உயிர்களும் அல்லவா? அப்படியானால் நாம் முதன்முதலாக வாழ்த்துப் சொல்ல வேண்டியது நிலத்திற்குத்தானே... ஆம் நிலத்தை வாழ்த்த வேண்டும்.. வெறுமனே நிலத்திற்கு வாழ்த்துப் சொல்லி கடந்து சென்றால் பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்று கடந்து போயிருப்போம். பாடலும் கால வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருக்கும். அந்த நிலத்திற்கு வாழ்த்து எதனால் கிடைக்கிறது என்ற அருமையான ஒரு கருத்தைச் ...