கொண்டானைக் கொல்லும் படை
கொண்டானைக் கொல்லும் படை மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். இந்த வரம் எல்லோருக்கும் நினைத்தபடி வாய்த்திடுவதில்லை. மனைவி சரியாக அமையாமல் தடுமாறும் குடும்பங்கள் ஏராளம். நித்தம் நித்தம் சண்டை . எதற்கெடுத்தாலும் கோபம். நான் எல்லாம் சமைக்க மாட்டேன். வேண்டும் என்றால் கடையில் வாங்கி தின்போம். இப்படி வீட்டில் சமைக்காமல் கடையிலேயே வாங்கித் தின்று நாளையும் பொழுதையும் கழிக்கும் காலம். ஏட்டிக்குப் போட்டி பேசி மல்லுக்கட்டி நிற்கும் பெண்கள் அதிகமாகி வரும் காலம். பெண்ணுரிமை ...பெண்ணுரிமை என்று சொல்லி உரிமை எது ? கடமை எது என்பதுகூட பல நேரங்களில் புரியாமல் போய்விடுகிறது. உரிமைக்காக குரல் கொடுக்கிறோம் என்று சொல்லி நம் கடமைகளைச் செய்யாமல் விட்டு விடுகிறோம். கடமை தவறும்போது என்ன நிகழும் ? கண்ட கண்ட பட்டங்கள்தான் வந்து சேரும். நாலடியாரில் ஒரு பாடல் வருகிறது. அதில் பெண்ணைப் பார்த்து கூற்றம், பிணி, பேய் என்று கூறப்பட்டுள்ளது. பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள்...நான் பேயா...நான் பேயா... என்று நாலடியார் பாடலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்போல் தோன்றுக...