அப்படிப்பட்டவள் இல்ல...
அப்படிப்பட்ட புள்ள இல்ல .... .... மதிய இடைவேளைக்குப் பிறகு வகுப்பு தொடங்குவதற்கான மணி அடித்தது. அங்கங்கே நின்ற பிள்ளைகள் ஆளாளுக்கு அவரவர் வகுப்பை நோக்கி ஓடினர். மூன்றாம் வகுப்பு மாணவர்களும் தங்கள் வகுப்பிற்குள் வந்து அமர்ந்தனர். ராணியும் கூட சேர்ந்து வந்து தன் இடத்தில் உட்கார்ந்தாள். ராணி வகுப்பில் அமர்ந்ததுதான் தாமதம் , "வந்தியா... வந்தியா....இப்போ அக்காவிய வரட்டும். கெட்ட வார்த்தை போட்டாய் என்று அக்காவிய கிட்ட உன் பெயரைச் சொல்வேன் " தலையைத் தலையை ஆட்டினாள் பொன்னு. " இன்னைக்கு உனக்கு இருக்கு...உனக்கு இருக்கு அக்காவிய வந்ததும் நல்லா பூசை வாங்கு " கூட சேர்ந்து தாளம் போட்டாள் சந்திரா. கேட்டதும் ராணிக்கு முகமெல்லாம் குப்பென்று வியர்த்துக் கொண்டு வந்தது. பைக்குள் கையைப் போட்டு பென்சிலையும் பென்சில் சீவலையும் எடுத்தாள். கையில் பென்சிலோடு எழுந்த ராணியைப் பார்த்ததும், " ஏய்...குத்தப...