Posts

Showing posts with the label பழிக்கக்கூடாதவை மூன்று-நல்லொழுக்கம்

பழிக்கக்கூடாதவை மூன்று

பழிக்கக் கூடாதவை மூன்று தாயைப் பழிக்கக் கூடாது.  மதத்தைப் பழிக்கக் கூடாது.  உடலமைப்பைப் பழிக்கக் கூடாது. இந்த  மூன்று விழுமியங்களையும் கடைபிடித்து வந்தால் தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் எந்தவிதச் சிக்கலும் ஏற்படாது. நாடும் அமைதியாக சென்று கொண்டிருக்கும். முதலாவது தாயை ஏன் பழிக்கக்கூடாது என்று சொல்கிறேன். தாயைப் பழித்தால்... என்ன நடக்கும் என்பதை நீங்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே கண்டு வந்திருப்பீர்கள். இரண்டு மாணவர்கள் சண்டைப் போடுகிறார்கள். ஒருவன் வெறியோடு  மற்றவன் மேல் கையைப் போடுகிறான். என்ன சண்டை என்று கூப்பிட்டு விசாரித்தால் அம்மாவைப் பழித்துப் பேசிவிட்டான். அதனால்தான் அடித்தேன் என்பான். பெரும்பான்மையான நேரங்களில் சாதாரணமாகத் தொடங்கிய சண்டை உக்கிரமாவதற்குக் காரணம் அம்மாவைப் பழித்தும் பேசியதாலேயே இருக்கும். அவரவர்க்கு அவரவர் அம்மா பெரிது. அதனால் தன் தாயை யாரும்  பழித்துப் பேச அனுமதிக்க மாட்டார்கள். இந்த உலகத்திலேயே ஒருவரால் அதிகம் நேசிக்கப்படும் ஒரு நபர் ஒருவர் உண்டு என்றால் அவர் அம்மாதான். அம்மாவை எதற்காகவும் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்க மனம் வராது. இ...