Posts

Showing posts from May, 2024

இசையா பாடலா

இசையில்லாப்  பாடலா? நீயா....நானா என்ற போட்டி இன்று நேற்று ஏற்பட்டதல்ல. சங்ககாலம் முதற்கொண்டே இப்படிப்பட்ட  போட்டிகள்  நிகழ்ந்திருக்கின்றன. இருபெரும் ஆளுமைகளுக்குள் எப்போதும் போட்டி இருப்பதுண்டு. ஔவை, கம்பர் ,ஒட்டக்கூத்தர் ,புகழேந்தி  என்று எந்தப் புலவரும் இதற்கு விதி விலக்கல்ல. கம்பர் விடுகதைச் சொல்லப் போகிறேன் என்று  ஒருகாலடி ஆலிலைப் பந்தலடி என்று ஒரு விடுகதையைப் சொல்ல..... பதில் சொல்கிறேன் என்று ஆரையடா சொன்னாயடா என்று ஔவை போட்டுத் தாக்க அங்கே ஒரு இலக்கியப்  போரே நடந்தது. அந்த இலக்கியப்போர் கற்போருக்கு இன்றுவரை நல்ல விருந்தாகவும்  அமைந்திருக்கிறது. கல்வியா? செல்வமா? வீரமா? என்று ஒரு போட்டி. அவரவர் தரப்பு வாதங்களுக்கு வலு சேர்க்க  அவர்கள் கொண்டுவந்து நிறுத்திய கதாப்பாத்திரங்கள் இன்றுவரை நெஞ்சோடு உலா வருகின்றன. பொழுதுபோக்கு போட்டியாக இருந்தாலும் அது வாசிப்போருக்கு கேட்போருக்கு நல்ல விருந்தாகத்தான் இருந்திருக்கிறது. அதன்மூலம் நாம் அடைந்த நன்மைகள்  ஏராளம். நடந்து முடிந்த காலத்தில் அது விவாதம் பொருளாக இருந்தாலும்கூட  இன்றுவரை இலக்கிய இன்பத்த...

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்  நல்லவரையும் தீயவரையும் கொண்டதுதான் உலகு. நல்லவர் யார் என்பதற்கு நாம் ஓர் அளவுகோல் வைத்திருப்போம்.  தீயவர் யார் என்பதற்கும் ஓர் அளவுகோல் உண்டு. நாம் நல்லவர் என்று முடிவுசெய்து வைத்திருந்த ஒருவர் திடீரென்று தீயவராக மாறிவிடுகிறார். தீயவர் பல நாட்களாக நல்லவராக நம் கண்களுக்குத் தெரிந்திருக்கிறார். இதுதான் உண்மை. இது என்ன? இது நம் பார்வையில் ஏற்பட்ட கோளாறா? அல்லது உண்மையிலேயே அப்படித்தான் நிகழ்ந்துள்ளதா? நம்பமுடியவில்லை....வில்லை...வில்லை... அவரா இவர்? அவரா இப்படி மாறிப் போனார். சொல்லிச் சொல்லிப் புலம்புகிறோம். நல்லவர் திடீரென்று இப்படி கெட்டவராக மாறமுடியுமா? யாரிடம் போய் கேட்டு என் ஐயத்தைத் தீர்த்துக் கொள்வது?  அங்கேயும் இங்கேயும் தேடி கடைசியில்  கண்ணில் பட்டது அதிவீரராம பாண்டியன் எழுதிய  வெற்றி வேற்கை.   புரட்டினேன். நல்லவர் எப்படி கெட்டவர் ஆவார்.? ஒருநாளும் அது சாத்தியமில்லை என்று ஓச்சந்தலையில் ஓங்கியடித்துச் சொல்லித் தந்தார் அதிவீரராம பாண்டியன். ஆமா இல்ல...! இவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கிறதே....அப்படியானால் நல்லவர...

ஒத்த ரூபா

ஒத்த ரூபா பாண்டி தாத்தாவுக்கு நாலு நாளா காய்ச்சல். நாக்கெல்லாம் கசந்து கொண்டு ஒரு மாதிரியாக இருந்தது. கொஞ்சம்போல சுடு கஞ்சி யாராவது வச்சித் தந்தால் தேவலாம் போல இருக்கிறது  என்று நினைத்தபடி படுத்திருந்தார். யார் வச்சித் தருவார்கள்.? யாரிடம்  போய் கேட்பது?  முந்தைய மாதிரி இருந்திருந்தால்.... கண்களை உருட்டி  ஓங்கி குரல் கொடுத்து மொத்த வீட்டையும் கூட்டியிருப்பார். இப்போதெல்லாம் கொஞ்சம் உரத்த குரலுல கூப்பிட்டால் போதும். "அங்கே என்ன...கிழம் கிடந்து கூவுது "என்ற எதிர் குரல் வந்து வழி மறைக்கும். பேரன் பாலன் பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கிறான். அவன் வந்த  பின்னர்தான் தண்ணீர் என்றாலும் கேட்க முடியும். அவன் மட்டும்தான் கூப்பிட்டதும் "என்ன வேணும் தாத்தா "என்று ஓடி வருவான். கண்கள் பேரனையே தேடிக் கொண்டிருந்தன. பொழுது சாய வருவான். அது வரை ஏன் என்று கேட்க ஒரு பாதி பக்கத்தில் வராது. அப்படி நாதியற்றா போனார் பாண்டி தாத்தா.? எல்லாரும் இருக்காவ... இருந்து என்ன பண்ண? எல்லாம் அவர்செய்த பாவம்தான். ராசக்கிளிக்கு கொஞ்சநஞ்ச பாவமா செய்துருக்காரு ...? அதுக்குதான் கடவுள்   இப்படி க...

இணைப்பு மொழி என்றால் என்ன

இணைப்பு மொழி என்றால் என்ன இணைப்பு மொழி என்றால் என்ன என்ற கேள்வியைத் கேட்டுப் பாருங்கள். பலருக்குப் புரியவில்லை. இணைப்பு என்றால் ஒரு பாலம். மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்காக இருவருக்கு  இடையே ஒரு பாலமாக இருந்து செயல்பட வேண்டும். நாம் பேசும் மொழி கேட்பவர்களுக்கும் புரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் எதிர்வினையாற்ற முடியும். நம்மாலும் நாம் சொல்ல வந்த கருத்தை எதிராளிக்குப்  புரிய வைக்க முடியும். அப்படி இருவருக்கும் புரிந்த ஒரு மொழி ஒன்று உண்டென்றால் அதுதான் இணைப்புமொழியாகும். அதுதான்  இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்.இருக்க முடியும். நடைமுறைக்கும் ஒத்துவருவதாக இருக்கும். அப்படி இல்லாமல் இருவருக்குமே  புரியாதமொழி எப்படி இணைப்புமொழியாக  இருக்க முடியும்? அவர் பேசும் மொழி நமக்குத் தெரியாது. நாம் பேசும் மொழி அவருக்குத் தெரியாது. அப்படி இருக்கும்போது  இணைப்பு மொழியாக எந்த மொழி இருக்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள். சைகைமொழியாகத்தான் இருக்கும். கைகளை ஆட்டி ...மண்டையை ஆட்டி... கண்களை உருட்டி ...பேச வேண்டியதுதான். வேறு வழியே கிடையாது. நான் சொல்வது உண்மையா?...