Posts

Showing posts from June, 2020

தாத்தா புளியமரம்

                                தாத்தா புளியமரம்     முகிலன்,பாலன் இருவரும் அண்ணன் தம்பிகள்.        இருவரும் நாள்தோறும் பள்ளிக்கூடம் செல்லும்போது தாத்தாவிடம் போய் பத்து பைசா வாங்கி விட்டுதான் செல்லுவர்.        தாத்தாவும் பத்துப்பைசாவை கையில் கொடுத்து "நல்லா படிச்சுட்டு  வாங்க" என்று வாழ்த்துச்  சொல்லி அனுப்பி வைப்பார்.        மாத கணக்காக இதுதான் நடந்து கொண்டிருந்தது.        ஒருநாள் தாத்தா பத்துப்பைசாவோடு சேர்த்து ஆளுக்கொரு புளியங்கொட்டையையும் கையில் கொடுத்தார் .        ஒத்த புளியங்கொட்டையை வைத்து என்ன செய்ய முடியும்?        பள்ளிக்கு செல்லும் வழியில் இந்த ஒத்த புளியங்கொட்டையை வைத்து என்ன செய்வது என்று தூர வீசிவிட்டு சென்றான் பாலன்.      ஆனால் பாலனைப்போல முகிலனுக்கு  புளியங்கொட்டைய...

இன எழுத்துகள்

                              இன எழுத்துகள்      இன எழுத்துகள் என்றால் என்ன?            எதன் அடிப்படையில்  இன எழுத்துகளாக வகைப் படுத்தப்படுகின்றன?         இன எழுத்துகளை அறிந்து கொள்வதால் நமக்கு என்ன பயன்?என்று பல்வேறு கேள்விகள் நம் மனதில் வந்து போகலாம்.           முதலாவது இன எழுத்துகள் என்றால் என்ன?என்பதைப் பார்ப்போம்.           எழுத்துகள் தாம் பிறக்கும் இடம்,அவற்றை ஒலிப்பதற்கான                       முயற்சி , ஒலிப்பதற்கு எடு்த்துக்கொள்ளும் கால அளவு,                          வடிவம் , பொருள் இவை ஏதேனும் ஒருவகையில் ஒத்துப்                           போகும் எழுத்துகளை இன எழுத்துகள் என்று கூறுவர்.  ...

கற்றிலன் ஆயினும் கேட்க...

              கற்றிலன் ஆயினும் கேட்க....       கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு         ஒற்கத்தின் ஊற்றாம் துணை "                                                     குறள் : 414        நூல்களைக் கற்கவில்லை என்றாலும் கற்றறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.       அந்த கேள்வி அறிவானது ஒருவருக்கு வாழ்க்கையில் தளர்ச்சி ஏற்படும்போது ஊன்றுகோல் போல் நின்று துணையாக உதவும்.    கற்றிலன் _ நூல்களை படிக்கவில்லை    ஆயினும் _ என்றாலும்     ஒருவற்கு _ ஒருவருக்கு     அஃது _ அந்த கேள்வி அறிவானது     ஒற்கத்தின் _ தளர்ச்சி, வறுமை ,குறைவு     ஊற்று _நிலத்தடி நீர் ஊற்று    ஆம் _ போன்று     துணை _ துணையாக நிற்கும்  English couplet :   " Though learning n...

தள்ளா விளையுளும் தக்காரும்....

          தள்ளா விளையுளும் தக்காரும்....     " தள்ளா விளையுளும்  தக்காரும் தாழ்விலாச்       செல்வரும் சேர்வது நாடு "                                                          குறள் : 731      குறையாத உற்பத்தியைத்தரும் உழைப்பாள பெருமக்களும் தக்க அறிவுடைய சான்றோரும் குறைவில்லா செல்வத்தைப் பெற்ற செல்வந்தரும் சேர்ந்து வாழ்தலே நாடு எனப்படும். தள்ளா _ தளரச்சியற்ற, குறைவற்ற விளையுள் _ விளைச்சல் ,முதிர்கை,வயல் தக்காரும் _ சிறந்தோர், மேன்மக்கள் ,சான்றோர் தாழ்விலாச் _ குற்றமில்லாத, குறைவில்லாத ,துன்பம் தராத , சாய்வில்லாத செல்வரும் _ செல்வம் மிக்கவரும் சேர்வது _ சேர்ந்து வாழ்வது நாடு _ நாடு எனப்படும்     English couplet       "   Where spreads fertility unfailing where resides a band         Of virtuous men and those of ample wealth ...

அடக்கம் அமரருள் உய்க்கும்

    " அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை      ஆரிருள் உய்த்து விடும் "     அடக்கம் ஒருவனை உயர்த்தி என்றென்றும் அழியாத உயர்ந்த தேவருலகை அடைந்திடச் செய்யும்.     அடங்காமை பாவமாகிய இருளில் கொண்டு சேர்த்துவிடும்.   English couplet :     " Control of  self does man conduct to bliss th'immortals share      Indulgence leads to deepest night  and leaves him there " Explanation :    Self control will place a man among the Gods; the want of it will drive him into the thickest darkness of hell.     Transliteration :      "  adakkam amararuL irukkum adangaamai        aarirul  irunthu vidu            

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

 பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்களும் அவற்றை எழுதிய ஆசிரியர் பெயர்களும்  " நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைநிலைய வாங்கீழ்க் கணக்கு " பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மொத்தம் பதினெட்டு என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.   அறநூல்களாவன : (11 )  *   நாலடியார்  *  நான்மணிக்கடிகை *   இன்னா நாற்பது *  இனியவை நாற்பது *  திருக்குறள் *  திரிகடுகம் *  ஆசாரக்கோவை *  பழமொழி நானூறு *  சிறுபஞ்சமூலம் *  முதுமொழிக்காஞ்சி *  ஏலாதி அகநூல்களான: ( 6) #  கார் நாற்பது #  ஐந்திணைஐம்பது #  ஐந்திணைஎழுபது  #   திணைமொழி ஐம்பது #   திணைமாலை நூற்றைம்பது #  கைந்நிலை புறத்திணை நூல்: , 1 💐  களவழி நாற்பது   நூல்களின்   பெயர்             ஆசிரியர்  1 . நாலடியார்       சமண முனிவர்கள்  2.  நான...

சங்க இலக்கிய நூல்கள்

            சங்க இலக்கிய நூல்கள் சங்க இலக்கிய நூல்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டவை.    இச்செவ்வியல் இலக்கிய பாடல்களில் இதுவரை 2381 பாடல்கள்  மட்டும் கிடைக்கப்பட்டுள்ளன.  இப்பாடல்களை எழுதிய புலவர்களின் எண்ணிக்கை இதுவரை 473 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.   பாடிய புலவர்கள் வரலாற்றை ஆராயுமிடத்து அதில் பல  தரப்பட்ட தொழில் செய்தோர், மன்னர்கள் மற்றும் பெண்பால் புலவர்கள் இருந்ததாக அறியப்பட்டுள்ளது.   இவை அறப்பாடல்கள் புறப்பாடல்கள் என்ற இரண்டு பகுப்பின்கீழ் பகுக்கப்பட்டுள்ளன.ஒரு சில நூல்கள் அகம் புறம் இரண்டு கருத்தையும் உள்ளடக்கியதாகவும் உள்ளன.    பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும்  பதினெண்கீழ்க்கணக்கும் சங்க இலக்கிய பாடல்களாக கருதப்படுகின்றன. அவை யாவை என்பதை  கீழ்க்காணும் பாடல்கள் மூலமாக அறியலாம்.                எட்டுத்தொகை நூல்கள் " நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு  ஒத்த பதிற்றுப்பத்து ஓங...

தந்தையர் தினம்

Image
                தந்தையர் தினம்         முந்நூறு நாள் சுமந்தவள் அம்மா.    தோள்மீது சுமந்து  ,உலகம் காட்டி ,ஒவ்வொன்றாய் அறிய வைத்து,    நடைபயிற்றுவித்து,நன்மை தீமை அறிய வைத்து காலமெல்லாம் கூடவே நடப்பவர் அப்பா.     இப்படிப்பட்ட அப்பா இல்லை என்றால் நாம் இன்று இந்த நிலைமையில் இருந்திருக்கவே முடியாது என்பது நிதர்சனமான உண்மை.     அப்பாவின் சமபாதி அம்மா. ஆனால்  அன்பில் சமபாதி கிடைக்காத அப்பாவி குழந்தை அப்பா.     இதை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா!     நினைவுபடுத்திப் பாருங்கள்....உண்மை என்ன என்பது புரியும்.         அமெரிக்காவின் வாசிங்டன் நகருக்கு அருகிலுள்ள ஸ்போகன்    என்ற இடத்தில் இதே போன்றதொரு ஞாயிற்றுக்கிழமையில்    தேவாலயத்தில் அன்னையர் தின சிறப்பு பிராத்தனைக் கூட்டம் நடைபெற்றது.        திரளான மக்கள் கூடியிருந்து போதனையைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.       பிராத்தனைக்...

தீயினாற் சுட்டபுண்....

        தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்…. "   தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே   நாவினால் சுட்ட வடு " தீயினால் சுட்டபுண் உள்ளே ஆறிவிடும். வெளியில் தழும்பை தந்துவிடும்.அதேபோன்றுதான் ஒருவர் நெஞ்சைக் காயப்படுத்தும் சுடு சொற்களும் என்றுமே ஆறவே ஆறாது  நிரந்தர வடுவாகிப் போகும். English couplet : " In flesh by fire inflamed nature may thoroughly heal the sore; In soul by tongue inflamed the ulcer healeth never heal " Explanation:         The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal. Transliteration:         "  Theriyaathu Suttapun Ullaarum Aaraadhu   Naavinaar Sutta Varu " தீயினால் சுட்டபுண் ஆறிவிடும். ஆனால் அது ஏற்பட்ட இடத்தில் ஒரு நிரந்தர தழும்பைத் தந்துவிடும். ஒருவரை அவமானப்படுத்த வேண்டும்  என்ற நோக்கத்தோடு சொல்லப்பட்ட தீய சொல்லானது காலத்தால் ஆறிவிட்டது போல் தோன்றும். ஆனால் நினைக்கும்தோறும் உள்ளத்தில் வேதன...

தூங்குக தூங்கிச் செயற்பால....

             தூங்குக தூங்கிச் செயற்பால… "  தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க    தூங்காது செய்யும் வினை "    காலம் தாழ்த்தி செய்யத் தக்க செயல்களை காலம் தாழ்த்தி செய்யலாம். உடனடியாக செய்யபட வேண்டிய செயல்களைக் காலம் தாழ்த்தாமல் உடனடியாக செய்ய வேண்டும்.  தூங்குக  _ தாமதமாக, மந்தமாக தூங்கிச் செயற்பால _ தாமதமாக செய்யக்கூடிய செயல்களை தூங்கற்க _ தாமதமாக செய்யாதே தூங்காது _ உடனடியாக,விரைவாக செய்யும் வினை _செய்யத்தக்க செயல்கள் Translation : "   Slumber when sleepy works in hand beware    Thou slumber not when action calls for sleepless care" Explanation:      Delay does not matter on acts that have to proceed cautiously. Hurry up tasks that demand quick action. Transliteration :       " Thoongum Thoongich cheyarpaala Thoongarka       Thoongaadhu Seyyum Vinai " இது என்ன தூங்கிச் செய்வது... தூங்காமல் செய்வது…. வேடிக்கையாக இரு...

காலத்தினாற் செய்த நன்றி....

        காலத்தினாற் செய்த நன்றி....  " காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்      ஞாலத்தின் மாணப் பெரிது "                                                        குறள் : 102      ஒருவனுக்கு மிகவும் தேவையாக இருக்கும் நேரத்தில்       செய்யப்படும் உதவியானது அளவில் மிகச் சிறியதாக இருக்கலாம். ஆனால் அந்த உதவியானது எப்படிப்பட்ட தேவையான  காலத்தில் செய்யப்பட்டது என எண்ணிப் பார்க்குமிடத்து அதன் மதிப்பு உலகைவிட பெரியதாகக் கருதப்படும். Translation :       " A timely benefit though thing of little worth       The gift itself in excellence transcends the earth " Explanation          A favour conferred in the time of need though it be small          is ( in value ) much larger than the world . Translite...

கற்க கசடறக் கற்பவை...

      கற்க கசடறக் கற்பவை....      " கற்க கசடறக் கற்பவை கற்றபின்        நிற்க அதற்குத் தக "                                                 குறள் : 391    ஒருவன் தான் கற்க வேண்டிய நூல்களை பிழையற நன்கு கற்க வேண்டும்.அவ்வாறு கற்ற பின்னர்  கற்றவற்றிற்கு ஏற்ப  அவற்றை    நடைமுறைப்படுத்தி ஒழுகுதலை கடைபிடிக்க வேண்டும். Translation :      "So learn that you may full and faultless learning  gain        Then in obedience meet to lessons learnt remain " Explanation :          Let aman learn thoroughly whatever he may learn and          ...

மகன் தந்தைக்கு ஆற்றும்...

          மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி... "  மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை         என்நோற்றான் கொல்எனும் சொல் "  மகன் தந்தைக்கு செய்யும் உதவி யாதெனில் இவனுடைய பெற்றோர்   இப்படிப்பட்ட மகனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தனரோ என  பெருமைப்படும் விதமாக இருத்தல் வேண்டும். Translation :   "    The duty of a son to his father is to make others to wonder     What penance the father had done to beget him " Explanation :        The duty of the children is to make other people to explain what        prayers the parents had done to give birth to these valuable           children.    மொத்தத்தில் பெற்றோரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் பிள்ளைகள் இருத்தல் வேண்டும்.       இப்படி ஒரு பிள்ளை பிறப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் உலகம் மெச்சவேண்டும்.       என்ன புண்ணியம்  பண்...

நீதி சொல்லும் சேதி

        நீதி சொல்லும் சேதி   மகனே உன் தகப்பன் புத்திமதியைக் கேள்   உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே"                                                     நீதிமொழிகள்  1 :8 எந்த பொருளின் மதிப்பும்  இருக்கும்வரை நமக்குத் தெரிவதில்லை.      கைவிட்டுப் போன பின்னே அதைப்பற்றி  ஆகா...ஓகோ...என்று வானளாவ புகழ்ந்து கொண்டிருப்போம்.      கிட்ட இருந்தால் முட்டப்பகை. தூர இருந்தால் சேர உறவு. அறிவுரை என்றாலே காதுகளைப் பொத்திக் கொண்டு காத தூரம் ஓடுவோம்.     அம்மா அப்பாவை பிள்ளைகள் வெறுக்கிற ஒன்று உண்டென்றால் இந்த அறிவுரைக்காக மட்டுமாகத்தான் இருக்கும்.     வேறு எந்த காரணமும் இருக்கமுடியாது.     கேட்பதற்காகவே காதுகளை இறைவன...

கல்விக்கண் திறந்த காமராசர்

                கல்விக்கண் திறந்த காமராசர்     ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாள்.        கர்ம வீரர் காமராசர் கல்விக்கு ஆற்றிய தொண்டுகளைப் போற்றும் விதமாக அவர் பிறந்தநாளான ஜூலை15  ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.        2006 ஆம் ஆண்டு தமிழக அரசு அதற்கான ஆணையை வெளியிட்டது.        பள்ளிகளில் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.        அதற்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன.     இளமைப் பருவம் :                            "   எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் "      அப்படியானால் கல்விக் கண் திறந்த காமராசரும் இறைவன் என்றால் மிகையாகாது.      ஆறு வயத...

நாலு கோடி

                          நாலு கோடி   மன்னர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைதான் சாசனம்.     மன்னன் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது.     மன்னர்களால் வாழ்ந்தவர்களும் உண்டு. வீழ்ந்தவர்களும் உண்டு.     வாய் தவறி வந்த வார்த்தைகள்கூட ஆணையாகி சில நேரங்களில்        ஆபத்துக்களைத் தந்துண்டு.     இங்கே சோழ மன்னர் ஒருவருக்கு திடீரென்று ஒரு ஆசை.     நாளை காலைக்குள் நாலு கோடிப் பாடல்கள் எழுதி வர வேண்டும்     என்று தன் அவையிலுள்ள புலவர்களுக்கு ஆணை பிறப்பித்து விடுகிறார்.     நாளை காலைக்குள் நாலு கோடி பாடலா?     அதிர்ந்து போகின்றனர் புலவர்கள்.     நான் எங்கே போவேன்....எங்கே போவேன்...     யாரிடம் போய் கேட்பேன்....ஐயோ...எனக்கு வேணும்...எனக்கு வேணும்...     ஆளாளுக்கு புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.     அப்போது அங்கே ஔவை...

கண்ணின்று கண்ணற....

            கண்ணின்று கண்ணறச்.......  "   கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க         முன்னின்று பின்னோக்காச் சொல் "                                                                      குறள்: 184       நேருக்கு நேராக நின்று ஒருவருடைய கண்களைப் பார்த்து  துணிச்சலோடு கடுமையாக எதுவும் சொல்லலாம். ஆனால் பின்விளைவுகள் எதையும் எதிர் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப்பற்றி ஒருபோதும் எதுவும் பேசுதல் கூடாது.       English couplet:.   184        "   In presence though unkindly words you speak say not           In absence words whose ill result exceeds your thought " Explanation :            Though you speak without kindness before a...

வறியார்க்கொன்று ஈவதே....

                வறியார்க்கொன்று ஈவதே..... " வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்  குறியெதிர்ப்பை நீர துடைத்து " விளக்கம் :   பொருள் ஏதும் இல்லாமல் துன்பப்படும் ஒருவருக்கு கொடுத்தல் மட்டுமே ஈதல் என்று சொல்லப்படும். மற்றபடி கொடுப்பதெல்லாம்    திரும்பப் பெற வேண்டும் என்ற நோக்கோடு கொடுப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.  English couplet :     " Call that a gift to needy men thou dost dispense      All else is void of good seeking for recompense " Explanation :    To give to the destitute is true charity. All other gifts have the nature of   ( what is done for ) a measured return. Transliteration :     vaRiyaarkkondru devadhai eekaimaR Ellaam     KuRiyedhirppai neera thudaiththu       தன்னால் வாங்கிய பொருளை திருப்பித் தர முடியாத அளவுக்கு பொருள் ஏதும் இல்லாத வறியவர்க்கு் கொடுப்பது மட்டுமே ஈகை எனப்படும்.       மற்றபடி கொடுப்பது எல்லாம...

நல்ல சமாரியன் யார் ?

Image
                      நல்ல சமாரியன் யார் ? ஒரு குட்டிக் கதை சொல்லப்போகிறேன் . இன்று டிரெண்டிங்காக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மேட்டர் இதுதான். ஆளாளுக்கு குட்டிக்கதை சொல்லப் போகிறேன் . குட்டி...குட்டி..கதை சொல்லப் போகிறேன் என்று கிளம்பிவிட்டார்கள்.       பேச்சாளர்கள் தங்கள் பேச்சில் சுவாரசியத்தை ஏற்படுத்த குட்டிக் கதைகளைச் சொல்வது வழக்கம்.       குட்டிக் கதைகள் இல்லா அரசியல் மேடைகள் இல்லை.      இன்று தாங்கள் சொல்ல வந்த கருத்துக்கு சம்பந்தமே இல்லாமல் எல்லோரும் குட்டிக்கதைகள் சொல்ல கிளம்பிவிட்டார்கள்.       இப்போது குட்டிக்கதைகளின் காட்டில் மழையோ மழை ....அடை மழை.                   ஆனால் இந்த கதை சொல்லும் போக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல.       பைபிளில் ஏசு கிறிஸ்து பல குட்டிக்கதைகளைக் கூறியிருப்பதை நாம் வாசித்திருக்...

பிறந்தநாள் வாழ்த்து

Image

நெருநல் உளனொருவன் இன்றில்லை.....

            நெருநல் உளனொருவன் இன்றில்லை.....     " நெருநல் உளனொருவன்  இ்ன்றில்லை என்னும்        பெருமை உடைத்து இவ் வுலகு"     நேற்று இருந்தவர் இன்று இல்லை என்று சொல்லும்படியான நிலையாமையாகிய பெருமை உடையது இவ்வுலகு.        நெருநல் _  நேற்று        உளன் ஒருவன் _ வாழ்ந்தவன் ஒருவன்        இன்றில்லை _ இன்று உயிரோடு இல்லை        பெருமை உடைத்து_ நிலையாமையாகிய பெருமையைக் கொண்டது         English couplet:       " Existing yesterday today to nothing hurled.        Such greatness owns this transitory world " Explanation :      This world possesses the greatness that one who yesterday was is not today.   Transliteration:          "  Nerunal uIlan oruvan Intillai Ennum            Perumai Utaiththuiv Ullaku " ...

அன்பும் அறனும் உடைத்தாயின்....

Image
            அன்பும் அறனும் உடைத்தாயின்..... " அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை    பண்பும் பயனும் அது "        (  குறள்  : 45 )     மனைவி பிள்ளைகள் மீது அன்பும் அறச்செயல்கள் செய்ய வேண்டும் என்ற பண்பும் இருந்தால் இல்வாழ்க்கை  பயன் தருவதாக அமையும். English couplet : 45       "   If love and virtue in the household reign          This is of life the perfect grace and gain "    Explanation :         If the married life possess love and virtue, these will be both         its duty and reward.            Transliteration :     "   anpum  aRanum udaiththaayin ilvaazhkkai       paNpum payanum adhu "   ...

ஜெபிக்கும் கரங்கள்

Image
                            ஜெபிக்கும் கரங்கள் ஜெர்மனி நாட்டில்   ஆல்பிரெச் ,ஆல்பிரட்  என்ற இரு சகோதரர்கள் இருந்தனர்.   இருவருக்கும் ஓவியம் கற்றுக்கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆசை.     ஆனால் வீட்டில் வறுமை.     போதுமான பண வசதி இல்லாததால் இருவராலும் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது.     ஆனாலும் இருவருக்கும் எப்படியாவது படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைந்தபாடில்லை.     இருவரும் என்ன செய்யலாம் என்று யோசித்தனர். இறுதியாக ஒருவர் வேலை செய்து இன்னொருவரை படிக்க வைக்க வேண்டும்.     ஒருவர் படிப்பு முடித்து வந்ததும் இன்னொருவரைப் படிக்க வைக்கலாம் என்ற முடிவு எடுத்தனர்.     இப்போது யார் முதலாவது படிக்க செல்வது என்பதில் குழப்பம்.      பூவா ...தலையா ...போட்டுப் பார்த்துவிட வேண்டியதுதான்.      பூ ...விழுந்தவர்  முதலில் படிக்கச் செல்ல வேண்...

விதைகள் தூங்குவதில்லை

Image
                விதைகள் தூங்குவதில்லை   "  விதைத்தவன் தூங்கினாலும் விதைகள் தூங்குவதில்லை" என்று சொல்வார்கள்.        ஆனால்  தூக்கத்தை விரும்பாதோர் யாருமே கிடையாது. தூங்கியே பெயர் வாங்கிய கும்ம கர்ணன் போன்றோர் பிறந்த பூமி இது.       என்னைவிட்டால் மணிக்கணக்காக தூங்குவேன். என்னிடம்போய் விதைகள் தூங்குவதில்லை என்கிறீர்கள் ....கேட்க தோன்றும்.      அது தாங்க உண்மை.     நான் சொல்லலங்க... இந்த பூமி சொல்லுது....கேளுங்க.     நாள் கணக்காக வானம் பார்த்த பூமி.      வானம் பார்த்து வாய் பிளந்து கிடந்தது. வானத்திற்கு பூமியின் மேல் ஒரு பரிதாபம் ஏற்பட்டது.          இது நாள் வரை தேக்கி வைத்திருந்த நீரை மழையாக  பொழிய ஆரம்பித்தது.          பூமி எங்கும் குளிர்ச்சி.          நான்க...