கல்லாதான் கற்ற கவி
கல்லாதான் கற்ற கவி போலச் செய்தல் சிறுபிள்ளகள் செய்யும் செயல். நாம் என்ன செய்கிறோமோ அதை அப்படியே செய்து காட்ட நினைப்பது குழந்தைகளின் இயல்பு. அது வேடிக்கையாக இருக்கும். அதுதான் அவர்களுக்குப் படிப்பினையாகவும் இருக்கும். அதுபோல நாமும் பிறரைப் போல நடக்க வேண்டும் என்று முயற்சிப்போம். அது நல்லதா கெட்டதா என்பது செய்யும் செயலைப் பொறுத்தே அமையும். எல்லா இடங்களிலும் இந்தப் போலச் செய்தல் எடுபடாது. ஒவ்வாத ஒரு செயலை பிறரைப் போல செய்ய நினைத்தால் பிறருடைய பார்வைக்கு அது நகைச்சுவையாகதான் இருக்கும். எப்போதுமே நாம் நாமாக இருப்பதுதான் நல்லது. அப்போதுதான் நம் தனித்தன்மை வெளிப்படும். ஒரு பேச்சாளர் இன்னொரு பேச்சாளர் போல பேச நினைத்தால் அவர் தோற்றுத்தான் போவார். நமது எழுத்தோ அல்லது பேச்சோ யாரைப் போன்றும் இருக்கக் கூடாது. அவரைப்போல் இவரைப் போல் என்று ஒன்றிரண்டு படித்து வைத்துவிட்டுச் பேசவோ எழுதவோ நினைத்தால் நாம் எழுத்தாளராகவோ பேச்சாளராகவோ நம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது. இசையமைப்பாளரும் இன்னொரு இசையமைப்பாளரைப்போல இசையமைத்தால் எத்தனை நாளைக்குத்தான் அ...