Posts

Showing posts from August, 2022

வாடகைத் தாய்

      வாடகைத் தாய்  ராதா ஒரு முறைக்குப் பலமுறை  யோசித்துப் பார்த்தாள்.  ஏற்பதா....? மறுப்பதா..? ஏற்றுக்கொண்டால்...அரைவயிறும் கால்வயிறுமென அன்றாடம் வயிற்றோடு நடத்தும் போராட்டத்துக்கு ஒரு இடைக்காலத் தீர்வு கிடைக்கும். ஆனால்.. அதன்பின்னர் சமுதாயத்தில் என்நிலை.... எனக்கென்று தனி முத்திரை குத்தி ஒரு மாதிரியாக பார்ப்பர். அதனை என்னால் சமாளிக்க முடியுமா? வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இந்த நேரத்தில் யாராவது ஒரு வழிகாட்டிவிட மாட்டார்களா? என்ற ஏக்கத்தோடு கண்கள் எதிர்பார்த்து காத்திருந்தபோது எதேச்சையாக காப்பகத்தில் சமையல் வேலை  பார்க்கும்  மேரி அக்காவைச் சந்திக்க நேரிட்டது. உன் குடும்பச் சூழலுக்கு என்னால் உதவ முடிந்த ஒரே வழி இதுதான் என்று ஒரு மாதத்திற்கு முன்னர்தான் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் ஆயா வேலை வாங்கிக் கொடுத்தார்கள். காப்பகத்தில் ஆயா வேலைக்குச் சேர்ந்த  பின்னர்தான் காப்பகத்துப் பிள்ளைகளுக்கு மருத்துவம் பார்க்க வரும் நர்ஸ் அக்காவோடும் பழக்கம் ஏற்பட்டது. வீட்டுப் பிரச்சினைகளைப் பற்றியும்  பேசுவோம். அப்போதுதான் நர்ஸ் அக்கா இப்படி ஒரு ஆஃபர்...

இஞ்சி தின்ன குரங்கு

இஞ்சி தின்ன குரங்கு  இருட்டு வீட்டுல குருட்டு எருமை   என்ன செய்யுது?"   குரல் கொடுத்தபடியே அடுப்பங்கறைக்குள்   வந்தாள் புவனா.    "ஒண்ணுமில்யே....."உதட்டைப் பிதுக்கி கையை விரித்தாள் மாலதி " சம்மன் இல்லாமலே ஆஜர் ஆகுறமாதிரி இருக்கு. ஏதோ இருக்கு .... வாயைக் காட்டு....வாயைக்காட்டு...." விடாமல் கேள்வி கேட்டாள் தங்கை  புவனா. "காவோலையில நாய் நடந்த மாதிரி ஏன் சடசடன்னு பேசிகிட்டு இருக்க ....என் வாயில ஒண்ணும் இல்லை. பாரு...பாரு...நல்ல பாத்துக்க தாயி......." "வாய்க்குள்ள ஏதோ இருக்கு அதுதான் வாயைத் திறக்க மாட்டேங்கிற... ஒண்ணுமில்லன்னா  வாயை நல்லா திறக்க வேண்டியதுதானே," "இன்னா பாரு...ஆ...ஆ ... முதலை மாதிரி  திறக்கட்டுமா.... நல்லா பார்த்துட்டியா?...பார்த்துட்டியா?" வாயைப் பிளந்தாள் மாலதி. " வாயை மூடு....சகிக்கல... நீ விழுங்கிட்ட....ஏதோ தப்பு செஞ்ச மாதிரிதான் தெரியுது....ம் கண்டு பிடிக்கிறேன்." "இவ பெரிய டிடக்டிவ் ...கண்டு பிடிச்சுருவா முசல் பிடிக்கிற நாயை மூஞ்சிலேயே தெரியாது " " முசல பிடிக்கிறேனா ...இல்லையா என்பது புடிச்ச...

ஊக்க முடையான் ஒடுக்கம்.....

ஊக்க முடையான் ஒடுக்கம்..... ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து "                     குறள் :.     486 ஊக்கம் - மன உறுதி உடையான் - உடையவன்  ஒடுக்கம் - ஒடுங்கியிருப்பது பொரு - சண்டை,போர் தகர் - ஆடு ,கிடா தாக்கற்கு. தாக்குவதற்காக  பேரும் - பின்னாகக் கால் பெயரும் தகைத்து -தன்மையதாகும் பொருள்: மன உறுதி உடையவர்கள் கொடுமைகளைக் கண்டும் அடங்கியிருத்தல் ஆட்டுக்கடாவானது  தனது பகையைத் தாக்குவதற்கு முன்னர் தன் கால்களைப் பின்வாங்குவதற்கு ஒப்பாகும். விளக்கம்: எந்த அநீதியையும் தட்டிக் கேட்கும் துணிச்சல் ஒரு சிலரிடம் இருக்கும். அப்படி இருந்தும் தங்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை தட்டிக் கேட்காது அமைதியாக இருப்பர். அதற்குக் காரணம் அச்சம் என்று தவறுதலாக எண்ணிவிட வேண்டாம் . சிலரின் அமைதிக்குப் பின்னால் ஏதோ ஒரு திட்டம் இருக்கும். சரியான நேரம் பார்த்துத் தாக்குவதற்குதான் காத்திருப்பர். தன்னால் முடியும். அப்படியிருந்தும் திருப்பியடிக்காமல் பின்வாங்குவது  எதைப் போன்று இருக்கிறது என்றால்  சண்டைக்காக...

எய்தற் கரிய இயைந்தக்கால்.....

எய்தற் கரிய இயைந்தக்கால்.... எய்தற் கரிய இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல் "                    குறள் :. 489 எய்தற்கு- அடைவதற்கு அரிய - அருமையான(காலம்) இயைந்தக்கால்- வாய்ப்பாக அமைந்தால் அந்நிலையே -அந்தப் பொழுதே செய்தற்கு- செய்வதற்கு அரிய - அருமையான செயல்கள்  செயல்- செய்து முடிக்க கிடைப்பதற்கு அரிய காலம் வாய்ப்பாக அமையுமானால் அந்தப்பொழுதே அதனைப் பயன்படுத்திக் கொண்டு செய்வதற்கு அருமையான செயல்களைச்  செய்து முடிக்க வேண்டும். விளக்கம்: ஒரு செயலைச் செய்வதற்கு ஏற்ற  காலம் வாய்ப்பாக வந்து அமையும்போது அதனை  விட்டுவிடக்கூடாது. உடனே பெறுதற்கு அரிய காலம் இதுதான் என்பதை உணர்ந்து அந்தப்பொழுதே செயலில் இறங்கி வேலை செய்ய வேண்டும். காலம் நில்லாது.  வாய்ப்பும் மறுபடியும் அமையாது. பின்னால் இப்படி ஒரு வாய்ப்பு அமையவும் செய்யலாம். அமையாமலும் போகலாம். அதனால் குறித்த காரியத்தை வாய்ப்புக் கிடைத்த அந்தப் பொழுதே செய்து  முடித்துவிடுக. காலம் பார்த்துக் காத்திருப்பது எவ்வளவு இன்றியமையாததோ அது போன்றதுதான் வந்த வாய்ப்பை உடனே ...

வெள்ளிவிழா வாழ்த்து

        வெள்ளிவிழா வாழ்த்து     வெள்ளிவிழா நினைவுகள்      நெஞ்சினில் அசை போட      பொன்விழா நாட்களை       மனம் எதிர்பார்த்திருக்க      மணிவிழா மகுடம் சூட்ட      கரம் நீட்டி வரவேற்றிருக்க      நூற்றாண்டுவிழா வாய்ப்பு      வரமாய் அமைந்திட      நாளெல்லாம் உவகையும்      விழாக்கால மகிழ்ச்சியும்      இல்லத்தில் தங்கி      இனிய கூட்டாட்சி நடத்திட      இதயம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்      வாழ்க நூறாண்டு....      நுவலரு நலங்களை      அள்ளிக் கொண்டு!                           

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்.....

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்..... ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து "                     குறள் :.     486 ஊக்கம் - மன உறுதி உடையான் - உடையவன்  ஒடுக்கம் - ஒடுங்கியிருப்பது பொரு - சண்டை,போர் தகர் - ஆடு ,கிடா தாக்கற்கு. தாக்குவதற்காக  பேரும் - பின்னாகக் கால் பெயரும் தகைத்து -தன்மையதாகும் மன உறுதி உடையவர்கள் கொடுமைகளைக் கண்டும் அடங்கியிருத்தல் ஆட்டுக்கடாவானது  தனது பகையைத் தாக்குவதற்கு முன்னர் தன் கால்களைப் பின்வாங்குவதற்கு ஒப்பாகும். விளக்கம்: எந்த அநீதியையும் தட்டிக் கேட்கும் துணிச்சல் ஒரு சிலரிடம் இருக்கும். அப்படி இருந்தும் தங்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை தட்டிக் கேட்காது அமைதியாக இருப்பர். அதற்குக் காரணம் அச்சம் என்று தவறுதலாக எண்ணிவிட வேண்டாம் . சிலரின் அமைதிக்குப் பின்னால் ஏதோ ஒரு திட்டம் இருக்கும். சரியான நேரம் பார்த்துத் தாக்குவதற்குதான் காத்திருப்பர். தன்னால் முடியும். அப்படியிருந்தும் திருப்பியடிக்காமல் பின்வாங்குவது  எதைப் போன்று இருக்கிறது என்றால்  சண்டைக்கா...

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்....

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்.... " பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழைமையைக் கீழ்ந்திடா நட்பு"                       குறள் :  801                        பழைமை - நெடுங்காலமாகத் தொடரும் நட்பு எனப்படுவது - என்று சொல்லப்படுவது யாதெனின்- எது என்றால் யாதும் -சிறிய அளவியினும் கிழமையை - உரிமையை கீழ்ந்திடா - தாழ்வுபடுத்தாத நட்பு - தோழமை நல்ல நட்பு என்று சொல்லப்படுவது எது என்றால் நம்மோடு பழகியவர் உரிமையோடு செய்யும் செயலை இகழ்ந்திடாது ஏற்றுக் கொள்வதேயாகும். விளக்கம் :  நட்பு நெடுங்காலமாகத் தொடரவேண்டுமானால் இருவரிடமும் ஒருவரோடு ஒருவர் ஒத்துப் போகும் பண்பு இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த நட்பு தொடரும். ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் உங்கள் நண்பர் உங்கள்மீது அதிக உரிமை எடுத்துக் கொண்டால் எத்தனைபேர் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம்? அதிக இடம் கொடுத்துவிட்டோமோ என்று சற்று ஒதுக்கப் பார்ப்போம். இதுவல்ல நட்பு. வள்ளுவர் பார்வையில்  நல்ல நட்பு என்பது  நம் நண்பர் அதிகம...

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்....

Image
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்.... நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும் "                              குறள் : 476 நுனி - முனை கொம்பர்- சிறிய கிளை ஏறினார் -ஏறியவர் அஃது-அது இறந்து-கடந்து ஊக்கின் - மேலும் முயன்றால் உயிர்க்கு-உயிருக்கு இறுதி-முடிவு ஆகி விடும் -  அமைந்துவிடும் மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர் அதையும் கடந்து மேலே செல்வேன் என்று ஏற முனைந்தால் அதுவே அவருடைய உயிர்க்கு இறுதியாக அமைந்துவிடும். விளக்கம் : மரத்தில் ஏறியவர் கிளையின் நுனி வரை சென்றுவிட்டார். அத்தோடு நின்றுவிடாமல் ஆர்வமிகுதியால் இன்னும் மேலே செல்வேன் என்று மேலே ஏறினால் கீழே விழுந்து  உயிர்விட நேரிடும்.அதுபோல ஒரு எல்லைக்கு மேல் மேலும் என்னால் செய்ய முடியும் என்று ஏதோ ஒரு மன ஊக்க மிகுதியால் நம்  ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஒரு செயலைச் செய்ய முனைந்தால் அது இறுதியில் துன்பத்தில்தான் முடியும். எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. தன் ஆற்றலின் எல்லை அறிந்து செயல்பட வேண்டும். ஒரு மரத்தில் ஏறி கா...

இம்மை மாறி மறுமை யாயினும்

Image
இம்மை மாறி மறுமை யாயினும்.... புன்னை மரத்தின் கீழ் தலைவி ஒருத்தி நின்றிருக்கிறாள். புன்னை மரத்தில் அணில் ஒன்று   அங்குமிங்கும் தாவித்தாவி புன்னங்கனிகளை ஒரு கடி கடித்து கீழே வீசி விளையாடுகிறது. புன்னம் இலைகளுக்கு இடையே பூத்துக் கிடக்கும் பூக்களை உடலோடு உரசி விளையாட்டு காட்டுகிறது. அணிலின் விளையாட்டினைக் கண்ட காற்றுக்கு கிளைகளை அசைத்து  நாமும் கொஞ்சம் அணிலோடு  விளையாடலாமே என்ற ஆசை வந்துவிட.... சற்று வேகமாக மரக் கொம்புகளை ஆட்டி அணிலை ஊஞ்சலாட வைக்கிறது. அணிலின் ஊஞ்சலாட்டமும் கொம்புகளின் உரசலும்  பூக்களை ஒன்றோடொன்று  முத்தமிட்டு விளையாட வைத்துவிட பூந்தாது இதழ்களில் ஒட்டிக்கொள்கிறது. இதழ்களின் மீதிருக்கும் தாதினைப் புன்னம் இலைகள்   துடைத்து நிற்க, பூக்கள் நன்றி சொல்வதுபோல் மலர்ச்சி காட்ட என்று புன்னை மரத்தில் அழகிய காட்சி அரங்கேறிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியில் தன்னை மறந்து நின்றவளைத் தொட்டு உலுக்கிய தோழி பாவை, "என்ன கனவு பலமாக இருக்கிறதோ?" என்றாள். "அப்படி ஒன்றுமில்லை. அந்த அணில் விளையாடுவதைப் பார்த்தேன்.அவ்வளவுதான்" "அவ்வளவுதானா? வேறு ஏதேனும் நினை...

தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு....

தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு... . தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல்"           குறள் : 462 தெரிந்த- தேர்வு செய்யப்பட்ட இனத்தோடு - இனமானவர்களோடு தேர்ந்து-ஆராய்ந்து எண்ணிச்- கருதி செய்வார்க்கு - செய்பவர்க்கு அரும்பொருள்-எய்தற்கரிய யாதொன்றும்- எதுவும் இல் - இல்லை நன்கு தேர்வு செய்யப்பட்ட  இனத்தோடு இணைந்து, செய்ய வேண்டிய செயலைத் தெளிவாக ஆய்வு செய்து ,செயலில் ஈடுபடுபவர்க்கு செய்ய முடியாத செயல்  என்று ஒன்றுமில்லை  விளக்கம்: ஒரு செயலைச் செய்வதற்கு முன்னர் அந்தச் செயலைச் செய்வதற்கு நாம் தேர்வு செய்யப்போகும்  நபர் இந்த செயலைச் செய்வதற்குப்  பொருத்தமானவர் தானா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அப்படி ஆய்வு செய்த பின்னரே  தகுதியான நபரை அந்தச் செயலைச் செய்வதற்கு நம்மோடு இணைத்துக் கொள்ள வேண்டும். நாம் தேர்வு செய்பவர் சரியாக இருக்க வேண்டும். நாம் செய்யப்போகும் செயலைச் பற்றியும் நமக்குத் தெளிவான சிந்தனை இருக்க வேண்டும். நமது தேர்வும் செயலைப் பற்றிய நமது சிந்தனையும் தெளிவாக இருந்தால் எளிதாக நாம் எடு...

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின்.....

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின்.... உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்"                                     குறள்: 473 உடைத்தம் -தம்மிடம் இருக்கக்கூடிய வலி - வலிமை அறியார் - அறியாதவர்  ஊக்கத்தின் - ஆர்வ மிகுதியால் ஊக்கி-  செயலைத் தொடங்கி  இடைக்கண்-இடையிலேயே முரிந்தார் -அழிந்தார், நொடிந்தார் பலர்-பலராவர் தமது வலிமை இவ்வளவுதான் என்பது அறியாமல் ஆர்வ மிகுதியால் ஒரு செயலைச் செய்யத் தொடங்கி  ,இடையிலேயே அதை முடிக்க  முடியாமல்  அழிந்து போனவர் பலர்  விளக்கம் : நம்மிடம் இருக்கும்  ஆற்றல்  எவ்வளவு என்பது நமக்கு மட்டுமே தெரியும். எனினும் பல நேரங்களில் அதனைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் ஆர்வம் மேலிட ஒரு செயலைச் செய்யத் தொடங்கிவிடுவோம். தொடர்ந்து அந்தச் செயலைச் செய்யத் தெரியாமல் தடுமாற்றம் வந்துவிடும். தொடங்கியபோது இருந்த ஆர்வம் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வரும். அடுத்தது என்ன என்ற கேள்வி எழும்போது விடை தெரியாது விழிப்போம். இனி என்ன செய்வது...

உணவு உண்ணும்போது பேசலாமா?

Image
உணவு உண்ணும்போது பேசலாமா? "செல்போன் பேசிக்கொண்டே பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் பரோட்டா தொண்டையில் விக்கியதால் மரணம்." செய்தியை வாசித்ததும் அப்படியே அதிர்ந்து போனேன். பரோட்டா விக்கியதால் மரணமா? இப்படியும் நிகழுமா? என்னால் நம்பவே முடியவில்லை. இதில் பரோட்டா தின்றதுதான் குற்றமா? இல்லை செல்போன் பேசியபடி பரோட்டாவைத் தின்றதுதான் குற்றமா? என்று என் மனதிற்குள் ஒரு பட்டிமன்றம் ஓட ஆரம்பித்தது. செல்போன் பேசியபடி பரோட்டா தின்பதில் என்ன குற்றம்? செல்போன் பேசவில்லை என்றாலும் சாப்பாட்டுத் தட்டின்முன் அமர்ந்ததும் அனைவரும் பேசுவது இயல்புதானே! எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். செல்போன் பேசுவதற்கும் நாம் சாதாரணமாக பேசுவதற்கும் என்ன வேறுபாடு? இரண்டிலும் பேசுவது வாய்தான். பேசிக்கொண்டே வேலை செய்யவில்லையா? அது போன்றதுதானே இதுவும்  என்று நினைக்கத் தோன்றும். இரண்டுக்கும் ஒற்றுமை இல்லை. இரண்டு வேலைகள் ஒரே நேரத்தில் நடைபெறாலாம். ஆனால் ஒரே உறுப்பைக் கொண்டு இரு வேலைகள் செய்யும்போதுதான் பிரச்சினை எழுகிறது. பேசும்போது தொண்டையிலுள்ள குரல்நாண் அதிர்வலைகளை ஏற்படுத்தும்போதுதான் ஒலி எழுப்...