Posts

Showing posts with the label முல்லையும் பூத்தியோ?

முல்லையும் பூத்தியோ?

Image
முல்லையும் பூத்தியோ? நெருநெல் உளனொருவன் இன்றில்லை என்னும்  பெருமை உடைத்து இவ் வுலகு" என்றார் வள்ளுவர். நேற்று இருந்தவன் இன்று இல்லை என்று சொல்லப்படும் நிலையாமை  ஆகிய பெருமை உடையது இவ்வுலகு. எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டார். உலகம் என்றால் ஆயிரம் இருக்கும். எதையும் தூக்கிச் சுமந்து மனதில் பாரத்தை ஏற்றிக் கொள்ளாமல்  சாதாரணமாக கடந்து போக வேண்டும். இது பெரியவர்கள் சொல்லித் தரும் பாடம். ஆனால் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொண்டு நம்மால் கடந்து செல்ல முடிகிறதா? சில இழப்புகள் நம்மை புரட்டிப் போட்டு விடுகின்றன. காலனையே கேள்வி கேட்க வைக்கின்றன. காலத்தின் மீது கோபம்கொள்ளச்  செய்கின்றன. தாங்க முடியாமல் விம்மி விம்மி  அழ வைக்கின்றன. உள்ளுக்குள்ளேயே வெதும்ப  வைக்கின்றன. புலம்பி தவிக்க வைக்கின்றன. புரியாமல் விழிக்க வைக்கின்றன. இனி எனக்கு என்ன இருக்கிறது என்று புலம்ப வைக்கின்றன. சில நேரங்களில் இறைவனையே  கேள்வி கேட்க வைக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து ஒருவர் இயற்கையையே கேள்வி கேட்கிறார். ஏன்...ஏன் மகிழ்ந்து மலர்ந்து சிரிக்க...