கொடியது கேட்கின்....
கொடியது கேட்கின்.... கொடியது எது என்று கட்டுரை எழுதுவதற்காக பத்திரிகை நிருபர் ஒருவர் பலரையும் நேர் காணல் செய்துவர புறப்பட்டார். அவர் புறப்பட்டு வெளியில் வரவும் தண்ணீர் குடத்தைத் தலையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாக சுமந்துகொண்டு ஒரு பெண் ஒருவர் எதிரே வருவதைப் பார்த்தார். முதலாவது பெண்ணிடமிருந்தே நேர்காணலைத் தொடங்குவோம் என்று நினைத்தபடி, "மேடம்....கொஞ்சம் நில்லுங்க .... உலகிலேயே கொடியது எது என்று சொல்ல முடியுமா ?" என்று கேட்டார். "பார்த்தால் தெரியல....தண்ணீர் இல்லாமல் ஒரு கிலோமீட்டர் தூரம் போய் தண்ணீர் சுமக்கிற மாதிரி கொடியது வேறு எதுவும் இருக்க முடியுமா?" திருப்பிக் கேட்டார் அந்தப்பெண். "உண்மை தாங்க...இது ரொம்ப கொடுமை" ஒத்துக் கொண்டார் நிருபர். இரண்டாவதாக நட்டநடு வெயிலில் காட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் போய் , "கொடியது என்று நீங்க எதை நினைக்கிறீங்க "என்று கேட்டார். " இந்த அனலில் வேலை பார்ப்பதை ...