கரடி பொம்மை தினம்
கரடி பொம்மை தினம் "ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்" என்பார்கள். ஆனைக்கும் பூனைக்கும் வரும் காலம் கரடிக்கு வராமலா போய்விடும்.? இதோ வந்துவிட்டது. பிப்ரவரி 10 கரடி பொம்மைக்கான தினம். காதலர் தினத்தைத் கொண்டாடிய உலகம் கரடியையும் விட்டுவிடவில்லை. இந்தநாளில் காதலர் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்காக மென்மையான கரடிப் பொம்மைகளைப் பரிசாகப் பரிமாறிக்கொள்வது மேலை நாடுகளில் வழக்கமாக இருந்து வருகிறது.இந்தக் கரடி பொம்மை அன்பு மற்றும் அரவணைப்பின் சின்னமாக உலக காதலர்களால் பார்க்கப்படுகிறது. திடீரென்று இந்தக் கரடி பொம்மை எண்ணம் எங்கிருந்து வந்தது.? இதற்கான ஆரம்பப் புள்ளி வைத்தவர் யார்? இதற்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமானால் நாம் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். ரூஸ்வெல்ட் அவர்களுக்கு வேட்டையாடுதலில் அதிக நாட்டம் உண்டு. ஒருநாள் வேட்டையாடுவதற்காக மிசிசிப்பி காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். வெகுநேரமாக வேட்டைக்காக அலைந்து...