காக்கைப்பாடினியார்
காக்கைப்பாடினியார் தலைவன் ஒருவன் வெளியூருக்கு பொருளீட்ட சென்று விட்டான். தலைவி தலைவனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறாள். தலைவன் வந்தபாடில்லை.. தலைவனைப் பற்றிய எந்த செய்தியும் இல்லை. என்ன ஆனதோ ஏதானதோ புலம்புகிறாள். வருவானோ வரமாட்டானோ என்று ஏக்கத்தோடு வழிமேல் வழிவைத்துக் காத்துக் கிடக்கிறாள். அப்போது .... காக்கை ஒன்று கரைகிறது. ஆ....இது காக்கையின் குரலல்லவா! காக்கைக் கரைந்தால் விருந்து வரும் என்று சொல்வார்களே! அப்படியானால் ..... அப்படியானால்.... என் வீட்டிற்கு விருந்து வரப்போகிறதா? எங்கள் வீட்டிற்கு விருந்தாளியாக யார் வரப்போகிறார்? வேறு யார் வரப்போகிறார்கள்? ஒருவேளை ....அவராக இருக்குமோ. என் தலைவன் வரப் போவதைத்தான் இந்த காக்கை கரைந்து அறிவித்துவிட்டு செல்கிறதோ...? இருக்கலாம்... இருக்கலாம். அந்த நம்பிக்கையில் தலைவி முகத்திலிருந்த கவலை காணாமல் போயிற்று. நம்பிக்கையோடு காத்திருக்கிறாள் தலைவி. அவள் எதிர் பார்த்தது போலவே தலைவன் வந்து விட்டான். தலைவிக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. என்ன செய்யலாம்... என்ன செய்யலாம் என்று அங்குமிங்கும் நடக்கிறாள் . காக்...