சினங்காக்க
கரடி ஒன்று மலை அடிவாரத்தில் வசித்து வந்தது. கரடிக்கு நாவல் பழங்கள் சாப்பிடுவது என்றால் கொள்ளைப் பிரியம். மலையில் நிறைய நாவல் மரங்கள் நின்றன. நாவல் பழங்களைப் பறித்துவயிராற தின்பதற்காக மலையின்மேல் ஏறியது. நாவல் மரத்தைக் கண்டதும் மரத்தில் ஏறி நாவல் பழங்களைப் பறித்துத் தின்றது. "எவ்வளவு சுவையாக இருக்கின்றன. மலையில் கிடைக்கும் பழங்களுக்கே தனி சுவைதான்" உண்ட மயக்கத்தில் நாவல் மரத்தின்கீழ் படுத்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டது கரடி. இப்போது மறுபடியும் கரடி மனதில் ஒரு பேராசை எழுந்தது. "மலை உச்சிக்குப் போனால் நல்ல தேன் கிடைக்குமாம். இன்று எப்படியாவது தேன் குடித்துவிட்டுத்தான் திரும்ப வேண்டும்" தேன் என்று நினைக்கும்போதே நாவில் எச்சில் ஊறியது. தேன் உண்ணும் ஆசையில் மலை உச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தது கரடி. மலைக்கு மேலே ஏற ...ஏற ...பனிப்பொழிவு காரணமாக மரக்கிளைகள் எல்லாம் பருத்தி மூட்டையைத் தூவிப் போட்டது போல் காட்சி அளித்தன. தேன்கூடு மட்டும் கண்ணுக்குத் தெரியவில்லை. மாலைப் பொழுது ஆகியது. எல்லா பறவைகளும் தங்கள் தங்...