பழமொழிகளின்புதிய விளக்கம்
பழமொழிகளின் புதிய விளக்கம் பழமொழிகள் என்பது அனுபவத்தின் மொழி. அனுபவத்தை அறிவுரையாகத் தந்த மூத்தோர்மொழி. இந்தப் பழமொழிகள் காலங்காலமாக பலர் நாவினில் பயின்று பழக்கமொழியாகிப் போனதும் பொருள் மாறுபட்டுப் போனதும் எப்படி என்பதைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள். 1. "களவும் கற்று மற " இது என்ன "களவும் கற்று மற" என்று சொல்லியிருக்கிறார்கள்...களவு ஒரு தப்பான தொழிலல்லவா! இதை முதலாவது கற்க வேண்டுமாம். அதன் பின்னர் மறக்கவேண்டுமாம். முரண்பாடாகத் தெரிகிறதே. இப்படியா நம் முன்னோர்கள் சொல்லி இருப்பார்கள்? இருக்காது ....இருக்கவே இருக்காது. "களவும் கத்தும் மற "என்றுதான் சொல்லியிருப்பார்கள். அது காற்றுவாக்கில் நாலு காதுகளுக்குச் சென்று, மாறி மாறி கடைசியில் "களவும் கற்று மற" என்று மாறியிருக்கும். மாறியிருக்கும் என்ன ...மாறிதான் போய்விட்டது. அதுதான் உண்மை. பஞ்சவர்ணத்தை பஞ்சாணம் என்றும் ஆபிரகாம் என்பவரை ஆவ...