நாற்பது வயதில் நாய்க்குணம்
நாற்பது வயதில் நாய்க்குணம் "நாற்பது வயதில் நாய் குணம் அறுபது வயதில் பேய் குணம்" என்பார்கள். "பன்றி பண்பாடிழக்கலாம் நாய் நன்றி மறக்கலாமா?" என்றும் கேட்பார்கள். "நாற்பது வயதில் நாய் குணம் அதை நாம் தெரிஞ்சு நடக்கணும் அறுபது வயதில் சேய் குணம் அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும் நேரத்துக்கு ஒரு புத்தி இருக்கும் நிமிஷத்துக்கு ஒரு பேச்சிருக்கும் எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும் கண்ணில் எள்ளும் கொள்ளும் வெடிச்சிருக்கும்" இது கவிஞர் வாலியினுடைய பாடல். நாய்க்குணம் மாற்றிப் மாற்றிப் பேசுவதும் கோபம் கொள்வதுமா? இது புதிதாக இருக்கிறதே. நாற்பது வயதில் நாய்க்குணம் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. அறுபது வயசில் சேய் குணம். அதாவது சிறுபிள்ளை போன்று மாறி விடுவராம் . அது உண்மை தான். சற்று மாற்றி யோசித்துப் பார்ப்போமே! நா குணம் என்பதைத்தான் நாய்க்குணம் என்று சொல்லி இருப்பார்களாக இருக்கலாம் . நாற்பத...