அம்மாவின் புலம்பல்
அம்மாவின் புலம்பல் "ஆளாளுக்கு என்னை இப்படித் துரத்தினால் நான் எங்கே போவேன்.? யாரிடம் போய் நிற்பேன்? யார் இருக்கிறார்கள் எனக்கு? சொல்லி அழகூட ஒரு சனம் இல்ல....யாரிடம் போய் என் குறையை சொல்லுவேன்.? சாமி....நீதான் கேட்கணும் "என்று வீட்டிற்கு மேற்குப் பக்கத்தில் இருந்த கோவிலைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார் அன்னப்பழம் பாட்டி. இந்தப் புலம்பல் இன்றுமட்டும் நடக்கவில்லை. கடந்த நாலு வருசமா பாட்டி இப்படித்தான் புலம்பி கிட்டு திரியிறாங்க. மருமகள்கள் ஏதும் சொல்லிவிட்டால் மகனிடம் போய் சொல்லுவார். மகன்" உனக்கு எதுக்கு வம்பு? வயசான காலத்துல வாயை வச்சுகிட்டு சும்மா கிடைக்கத் தெரியல என்றால் ஆளாளுக்குக் கேட்கத்தான் செய்வாளுங்க" என்று சொல்லிவிட்டால் போதும், "எனக்குப் பிறந்ததும் சரியில்ல... வந்ததும் சரியில்ல "என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். பாட்டியின் புலம்பல் கடவுள் காதுக்குத்தான் இன்னும் போய் சேரல... "என்ன அன்னப்பழம் சாப்பிட்டாச்சா...." கேட்டபடியே பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் பக்கத்துவீட்டு மாசானம் மனைவி மாடத்தி. ஏதோ நினைவில் இருந்த பாட்டிக்கு ஒன்ற...