மண்சட்டியும் மீன் குழம்பும்
மண்சட்டியும் மீன் குழம்பும் அசைவம் சாப்பிடுகிற அனைவர்க்கும் விருப்பமான குழம்பு ஒன்று உண்டென்றால் அது மீன் குழம்பாகத்தான் இருக்கும். எங்க சித்தி வைக்கும் மீன்குழம்புக்கு ஈடாக யாரும் மீன் குழம்பு வைக்க முடியாது. அது என்னவோ ஓடுகிறத் தண்ணீரில் மீனைத் தேடிப் பார்ப்பது போல குழம்பு தண்ணியாக இருந்தாலும் ருசி மட்டும் குறையவே குறையாது. கொஞ்சம் கெட்டியாக வைத்தால் என்ன என்று கேட்டால் எட்டு தட்டுக்கு ஊற்றணும். அதுவும் இரண்டு நேரத்துக்கு.... ஆளுக்கு இரண்டு அகப்பை ஊற்றினாலும் பதினாறு அகப்பை ஊற்றணும். கொஞ்சம்போல மிச்சம் இருந்தால் சுண்ட போட்டு பழைய சோத்துக்கூட கூட்டிகிட்டோம்ன்னா கூடுதலா ஒரு தட்டு கஞ்சி குடிச்சிடலாம் இல்லியா என்பார் சித்தி. மீன்குழம்பு செய்வதே ஒரு கலை. வெறுமனே பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்று செய்தால் சுவை இருக்காது. பார்த்துப் பார்த்துப் பக்குவமாகச் செய்ய வேண்டும். இப்படிச் செய்தீர்கள் என்றால் சட்டி பத்தலைக்கூட விட்டு வைக்க மாட்டீர்கள். சொல்லும்போதே இப்போதே மீன்குழம்பு செய்து சாப்பிடணும் என்று தோணுது இல்லலையா? அப்படிச் சொல்லித் தருவாங்க எங்க சித்தி. சித்தி மீன...