வெல்லும் சொல்லும் கொல்லும் சொல்லும்
வெல்லும் சொல்லும் கொல்லும் சொல்லும் "சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து" என்றார் வள்ளுவர். நாம் பேசுகிற சொல்லை இன்னொரு சொல் வெல்ல முடியாது என்பதைத் தெரிந்த பின்னரே அந்தச் சொல்லைப் பயன் படுத்த வேண்டுமாம். நமது சொல்லில் குற்றம் கண்டுபிடித்துவிடக் கூடாது. நமது சொல்தான் இறுதித் தீர்ப்புக்கு உரியதாக இருக்க வேண்டும். உள்ளங்களை வெல்லும் சொல்லாக இருக்க வேண்டும். "சொல்லைப் பற்றி எங்களிடமேயா? அட...போங்கங்க... நாங்கள் சொல்லுவதையும் சொல்லுவோம். சொல்லாததையும் கூட சொல்லுவோமில்ல... கூட்டிச் சொல்லணுமா? கழித்துச் சொல்லணுமா? பெருக்கிச் சொல்லணுமா ? வகுத்துச் சொல்லணுமா? எல்லாம் கணக்குப் போட்டு பேசுவோமில்ல..." என்ற மனக்கணக்கு எனக்குப் புரிகிறது. " கணக்குப் போட்டுப் பேசுவது எல்லாம் சரிதான். கணக்கில்லாமல் பேசிவிட்டு பேந்த பேந்த என்று எத்தனை இடங்களில் விழித்திரருப்பீர்கள். சற்றே பின்நோக்கித் திரும்பிப் பாருங்கள்." " வெல்லும் சொல்... கொல்லும் சொல் ... ...