எல்லாம் நன்மைக்கே...
எல்லாம் நன்மைக்கே... ! காட்டில் மான்கள் கூட்டமாய் வாழ்ந்து வந்தன. துள்ளலும் கும்மாளமுமாய் நாட்கள் இன்பமாய் கழிந்து வந்தன. ஒருநாள் பெட்டை மான் ஒன்று குட்டிப் போட்டிட அனைத்து மான்கள் கண்களிலும் உற்சாக விளக்கு கும்மென்று எரிந்தது. காடே துள்ளலும் கொண்டாட்டமுமாய் குதுகலித்துக் கொண்டிருந்தது. குட்டிமானுக்கு கால் தரையில் நிற்கவில்லை. பின்னே இருக்காதா என்ன? மூன்று அண்ணன்மார்களுக்கும் ஒற்றை தம்பி இந்த குட்டித் தம்பி. நாளாக ஆக தம்பியிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிய ஆரம்பித்தது. ஆமாம்... குட்டிக்கு கொம்பு வளரவே இல்லை. இது பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருந்தது. .மற்ற மான்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ...