பணி நிறைவு பாராட்டு மடல்
பணி நிறைவு பாராட்டு மடல் கவினணி புனைந்த எழில்மிகு வனத்தாய் கலையணி கொண்ட காட்சிக்கு விருந்தாய் மலையணி எங்கும் இயற்கை மருந்தாய் எழிலணி ஓரணிதிரள் சின்னமனூரில் அவதரித்தாய்! அறப்பாணியாளர் அப்பா சண்முகவேலோடு அன்பாய் களப்பணி ஆற்றிட விஜயாவும் இணைந்தாய் இல்லறப்பணி இன்பமாய் பத்மாவதி பிறந்தாய் நல்லறப்பணி சாட்சியாயினர் தம்பியரும் அருமருந்தாய்! முதற்பணி கல்வியென உத்தர்பாரதியில் சீரடி பதித்தாய் கலைப்பணிக்குச் சோமைய்யாவைத் தேர்வு செய்தாய் பெரும்பணிக்காய் கலினாவில் முதுகலை பயின்றாய் ஆசிரியப்பட்டயப் படிப்பிலும் முதல்நிலை பெற்றாய்! நற்பணி ஆற்றிட பிரைட் பள்ளிக்குள் நுழைந்தாய் உலகணி ஆங்கிலத்தை உவப்போடு கற்றிட வைத்தாய். கவியணி புனைந்த...