கண்டதும் கொண்டதும்
🌹 கண்டதும் கொண்டதும்🌹 👌 விருது வழங்கும் விழா👍 மும்பை மாநகராட்சித் தமிழாசிரியர் குழுமம் மும்பை. ஓய்வும் பணியும் ஓரிடத்தில் கைகோத்த விழா இளமையும் முதுமையும் இணைந்ததோர்ப் பெருவிழா உள்ளங்களை இணைக்கும் உறவுத் திருவிழா உள்ளுந்தோறும் நெஞ்சை அள்ளும் கவியாடுவிழா முத்தமிழும் சத்தமில்லாமல் முத்தமிட்டு விளையாடிய விழா கலையாடு கவியோடு கற்றவர் திரண்ட கலைவிழா அறிமுகச் சொற்கள் பேரதிர்வாய்ச் செவிமடலைத் திருப்ப இன்னிசைக் கீதம் ஒன்று இதமாய் நெஞ்சை வருட அடுக்குத் தொடரை அள்ளி வீசி ஆசிரியர் ஜெரோம் அனைவரையும் வரவேற்க தொடங்கியதிந்த விருது விழா பிடறி சிலிர்க்க அரங்கம் அதிர சிங்கம் ஸ்டீபன் சார் எழும்பி வந்து சிந்தனையைச் சிதற விட இடைச் செறுகலாய் உடல் நலம் பேணலுக்கும் உரையொன்று உண்டென்று செய்முறை நடனம் ஆடி சிலிர்க்க வைக்க மேகலா வர்ணன் ஆசிரியரும் அருமையாய்க் கை கோர்க்க மேடை கலை மேடையாகி ஓடை இது தமிழோடையென உவந்த வேளையில் Alive வாக இருக்க அலைகவெனச் சிலேடைகளை அள்ளி வீசி விழாவை live ஆக்கி காண்போரைத் தன் ...