படைப்புப் பல படைத்து
படைப்புப் பல படைத்து சங்கப் பாடல்களில் காதலும் வீரமும் நிரம்ப இருக்கும். புலவர்கள் மட்டுமல்லாது மன்னர்களும் புலவர்களுக்கு நிகராக பல பாடல்கள் பாடியுள்ளனர். வாழ்க்கையை அனுபவித்துப் பாடிய பல பாடல்களைச் சங்க இலக்கியத்தில் காணமுடியும். அறத்தோடு வாழ வேண்டும் என்று அறவுரைகளைத் தம் கவிதையில் தந்தனர். வீரத்தைப் புகழ்ந்து பாடினர். எங்கெல்லாம் அன்பும் அறமும் இருக்கிறதோ அங்கெல்லாம் பாடல்கள் பாடி பரிசில் பெற பாணர்கள் கூட்டம் நிற்கும். புலவர்கள் வாழ்வாதாரத்திற்கு பணம் தேவை. தங்கள் தேவைகளை நிறைவு செய்ய மன்னர்களைத் தேடி சென்று பாடல்கள் பாடினர். அரசர்களுக்கு அந்தத் தேவை இல்லை. இருப்பினும் அரசர்களிடமும் சிறந்த புலமை இருந்திருக்கிறது. பொருளுக்காக பாட வேண்டிய தேவை இல்லாதபோதும் தமிழ் மீது கொண்ட காதல் மன்னர்களையும் பாடல்கள் பாட வைத்திருக்கிறது. காணும் காட்சிகளை தான் கண்டு மகிழ்ந்த நெகிழ்ந்த ...கவினுறு காட்சிகளைக் பாடி மகிழ்ந்திருக்கின்றனர். நம்மையும் மகிழ்ச்சியடைய செய்திருக்கின்றனர். எல்லாவற்றிற்...