Posts

Showing posts with the label செருப்பும் விளக்குமாறும் -காளமேகம்

செருப்பும் விளக்குமாறும்

Image
செருப்பும் விளக்குமாறும் ஆசுகவி காளமேகப் புலவர் எந்தப் பொருளில் பாடல் பாடச் சொன்னாலும் பாடுவார். எந்தச் சொல் கொடுத்து அந்தச் சொல்லில் மட்டுமே பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாலும் உடனடியாகப்  பாடி முடிப்பார். அதனால் அவரைச் சீண்டிப்பார்க்க வேண்டும் என்றே ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு சொல்லையோ எழுத்தையோ கொடுத்துப் பாடும்படி கேட்டுக் கொண்டே இருக்கும். எப்படியாவது காளமேகத்தைத் தோற்கடித்துவிட வேண்டும் என்பது பல புலவர்களின் நெடுநாள்  ஆசை. அதுவும் சோழன் அவையில் ஆஸ்தான கவியாக வீற்றிருக்கும் அதிமதுரகவிராயருக்கு  வாழ்நாள் ஆசை என்றே சொல்ல வேண்டும். ஒருநாள் சோழன் அவையில் வைத்து காளமேகத்திற்கு புலமைத் தேர்வு வைக்கப்படுகிறது. ஏதேதோ சொல்லும் எழுத்தும் கொடுத்து பாடக் கேட்டு தோற்கடித்துவிடலாம் என்று பார்த்தார்கள். ஆனால் காளமேகம் என்ன சாதாரணப் புலவரா? வரம் வாங்கி வந்தவராயிற்றே.. விட்டுவிடுவாரா? அவர் எதையும்  பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. கேலியும் கிண்டலும் நையாண்டியுமெனப் பாடி  முடித்துவிட்டு அவர்பாட்டுக்குக் கடந்து போய்க்கொண்டே இருந்தார். ஏறுக்கு...