நற்றாமரைக் கயத்தில் நல்அன்னம்
நற்றாமரைக் கயத்தில் நல்அன்னம்.... உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்" என்பார்கள். நண்பன் எப்படியோ அப்படித்தான் அவன் சேர்க்கையும் இருக்கும் . இதைத்தான் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். நட்பு யாரோடு அமையும்? என்னென்ன காரணங்களுக்காக அமையும்? என்று அலசி ஆராய்ந்து பார்த்தால் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லலாம். உதவிக்காக...பணத்துக்காக.... ஒரே கருத்து இருப்பதற்காக..... என்று மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கலாம். ஆனால் அதிகப்படியான வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்றால் ஒத்திசைவு அதாவது ஒத்தக் கருத்துகொண்டோர் மாட்டு மட்டுமே நட்பு அமையும் என்பதாகத்தான் இருக்கும். எப்போதுமே ஒத்த குணத்தாரோடு மட்டுமே சேர்க்கை ஏற்படும். இது இயல்பாக அமையும் ஒரு செயல் என்றுதான் சொல்லவேண்டும். மூடனோடு அறிவாளி கைகோர்த்துச் சென்றால் பார்ப்பவருக்கே வேடிக்கையாக இருக்கும். ஒரு புதுமை நடைபெறுவது போல வினோதமாகப் பார்ப்போம். ஒத்திசைவு இருந்தால் நாட்டமும் ஈர்ப்பும் தானாய் நிகழும். தேனீக்களுக்குத் தேன் இருக்கும் இடம்தான் விருப்பமாக இருக்கும். வண்டுகளுக்கு மலர் மீதுதான் ஈர்ப்பு உண்டு. இவை எல்லாம் பயன்...