தள்ளா விளையுளும் தக்காரும்....
தள்ளா விளையுளும் தக்காரும்.... " தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு " குறள் : 731 குறையாத உற்பத்தியைத்தரும் உழைப்பாள பெருமக்களும் தக்க அறிவுடைய சான்றோரும் குறைவில்லா செல்வத்தைப் பெற்ற செல்வந்தரும் சேர்ந்து வாழ்தலே நாடு எனப்படும். தள்ளா _ தளரச்சியற்ற, குறைவற்ற விளையுள் _ விளைச்சல் ,முதிர்கை,வயல் தக்காரும் _ சிறந்தோர், மேன்மக்கள் ,சான்றோர் தாழ்விலாச் _ குற்றமில்லாத, குறைவில்லாத ,துன்பம் தராத , சாய்வில்லாத செல்வரும் _ செல்வம் மிக்கவரும் சேர்வது _ சேர்ந்து வாழ்வது நாடு _ நாடு எனப்படும் English couplet " Where spreads fertility unfailing where resides a band Of virtuous men and those of ample wealth ...