Posts

Showing posts with the label கனவினில் ஔவை- கவிதை

கனவினில் ஔவை

கனவினில் ஔவை  நார்க்கட்டிலில்  நாடி வானம் பார்க்க மூடி கண்கள் இருக்க மெல்ல தொட்டதொரு விரல் விழிகள் திறக்க மறுக்க கைகள் மட்டும் சிலிர்க்க கேள்வி கேட்க மனம் நினைக்க நா எழும்ப மறுக்க செவி மடலுக்குக்குள்  ஒரு  சலசலப்பு சிற்றெறும்பு கடித்ததொரு  சிலுசிலுப்பு செவி மடலைத் தழுவி செவி தீட்டி கவனம் திரட்டி குரல் அடையாள வகுப்பு நடத்தி குழம்பிய மனதோடு   காத்திருந்தேன் வெற்றுக் காற்று  வெப்பமொடு வந்து முட்ட கண் முன் ஏதோ  அசைவாடும் உணர்வு  யாரென்று  குரல் அதட்ட முட்ட வந்தவள்  இதழ்குவிக்க முத்துக்களைச் சிதற விட்டு வேடிக்கை காட்டி நின்றாள் மயங்கிக் கிடந்த என்னிடம்  வேசம் கட்டிய நான்  வேசக்காரியுமல்ல மோசக்காரியுமல்ல  யாரென்று நீர் உரைத்தால் சாகா மருந்தொன்று தருவேன் வேகா வெயிலில்  சுட்டப் பழம் எடுத்து வந்தேன் சுவைத்திட விருப்பமோ  எனக் கரம் நீட்ட சாகா மருந்து தர  இவளென்ன சஞ்சீவி பர்வதத்துக் காரிகையா? முட்டுக் கொடுத்து நடக்கும் இவள் முதுமகளா முழு முடமா? யாரிந்த கிழவி? ஏனிந்த விடுகதை? விடுகதை அவிழ்ப்பில் சிந்தை சிதற வான...