மேகம்
மேகம் திட்டுத் திட்டாய் வானத்தில் பட்டுப் பட்டு மேகங்கள் சொட்டுச் சொட்டாய் நீரை எடுத்துக் கட்டுக் கட்டாய் சேர்த்தது! மடியில் கனம் மிகுந்தது சடுதியில் சோர்வு கொண்டது உடலும் கறுத்துப் போனது ஒப்பாரி வைக்கத் துணிந்தது ! தரதரவென மடியைக் கிழித்து சடசடவென நீரைக் கொட்டி விடுவிடுவென நடந்தது படபடப்பு அடங்கிப் போனது! பஞ்சும் கொஞ்சம் விளையாடிட மஞ்சாய் மாறி மலைமுகட்டைத் தொட்டது விஞ்சும் மகிழ்வு தந்தது வீழ்ந்து தரையைத் தொட்டது !