வினையாலணையும் பெயர்
வினையாலணையும் பெயர் ஒரு வினைமுற்று வினையை உணர்த்தாது அவ்வினைக்கு உரிய கருத்தாவை உணர்த்தி, எழுவாயாக நின்று, வேற்றுமை உருபை ஏற்றும் ஏற்காமலும் வருவது வினையாலணையும் பெயர் எனப்படும். படித்ததும் ஒன்றும் விளங்காதது போல இருக்கும். மனப்பாடமாகப் படித்துவிட்டோம். இப்போது வினைமுற்று என்றால் என்ன?என்ற கேள்வி எழுகிறது. அதனை முதலாவது பார்ப்போம். ஒரு வினைச்சொல்லானது ஒரு செயல் முடிவுற்ற நிலையில் வினைமுற்று என்று அழைக்கப்படும். மாதவன் பாடினான் . மலர் ஆடினாள். தலைவர் கொடுத்தார். கொடி அசைந்தது பறவைகள் பறந்தன. பாடினார், ஆடினாள் , கொடுத்தார், அசைந்தது , பறந்தன இவை யாவும் ஒரு முடிவுற்ற செயலை அதாவது வினையைக் குறிப்பிடுவதால் இவற்றை வினைமுற்று என்று அழைக்கிறோம். முடிவுற்ற வினை வினைமுற்று எனப்படும் என்பதை அப்படியே மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். இப்போது வினைமுற்று என்றால் என்ன என்பது புரிந்திருக்கும். வினையாலணையும் பெயர் ஒருவினைமுற்று வினையை உணர்த்தாமல் அந்த வினையைப் செய்தவரை உணர்த்தும் அதாவது கருத்தாவை உணர்த்தும். பாடியவன் பாராட்டு பெற்றான். இதில் பாடியவன் வினையாலணையும் பெயர். பாராட்டு...