ஒளியார் முன் ஒள்ளிய ராதல்....
ஒளியார்முன் ஒள்ளிய ராதல்.... ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல்" குறள் :. 714 ஒளியார்-நல்ல அறிவுடையார் முன் - முன்னால் ஒள்ளியர் - அறிஞர் ஆதல் - ஆகுக வெளியார்- பேதையர் முன் - முன்னால் வான் - வெண்மையான சுதை- சுண்ணாம்பு வண்ணம்- நிறம் கொளல்- கொள்க அறிவுடையார் முன்னால் நாம் அறிவுடையவராகப் பேச வேண்டும். அறிவில்லாத பேதையர் முன்னால் நாம் ஒன்றும் தெரியாதவர்போல் இருந்து கொள்ள வேண்டும். விளக்கம் : அறிவுடையவர் முன்னால் அறிவார்ந்த செயல்களில் ஈடுபட வேண்டும். அறிவோடு பேச வேண்டும் நாமும் அறிவுடையவராக நடந்துகொள்ள வேண்டும். அறிவிலிகள் முன்னால் நாமும் அவர்களைப் போலவே ஒன்றும் தெரியாதவர் போல நடந்து கொள்ள வேண்டும். ஏன்? அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அறிவுடையவர்கள் முன்னால் நம் அறிவை மெய்ப்பிப்பது நல்லது. அவர்களால் நம்மைப் புரிந்துகொள்ள முடியும். நமது கருத்துக்கான அங்கீகாரம் கிடைக்கும்.பெருமையும் புகழும் வந்து சேரும். ஆனால் அறிவற்றவர்கள் முன்னால் நம் அறிவைக் காண்ப...