ஏனிந்த கொலை வெறி?
ஏனிந்த கொலை வெறி? காற்றே உனக்கு ஏனிந்த கோபம்? நேற்றுவரை முற்றம் வந்து முத்தம் தந்து சத்தம் செய்யாது காதோடு உரசி கவிபாடிச் சென்றாய் கனவினில் காதல் செய்தாய் கற்பனையில் மிதக்க வைத்தாய் ஒரே நாளில் மொத்தமாய் மறந்தாய் ஏனிந்த கொலை வெறி? சட்டென்று மாறும் வானிலை போல வெட்டென மறந்தாய் ஒட்டில்லை உறவில்லை என்று எட்டி உதைத்தாய் தட்டுத் தடுமாறி தலைகீழ் விழ வைத்தாய் மரங்களைப் பிய்த்து வீசி மகிழ்வு என்ன கண்டு விட்டாய் ஏனிந்த கொலை வெறி? நீரின்றி நானில்லை நின் நினைவின்றி உலகில்லை உண்மை தெரிந்திருந்தும் வன்மம் கொண்டு வன் கொடுமை செய்து விட்டாய் வஞ...