துணை
துணை சொர்ணக்கிளியோடு வீட்டில் வந்து இறங்கியதும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஒருமாதிரியாகப் பார்க்க ஆரம்பித்தனர். ஒரு சிலர் கண்டும் காணாததுபோல் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். அதற்குள் மூன்று மகன்களும் எப்படியோ செய்தி போக அடுத்த அரைமணி நேரத்தில் மூவரும் வீட்டு வாசலில் வந்து நின்றனர். அப்பா கட்டிலில் கண்மூடி கிடப்பதைப் பார்த்ததும்...மூவரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து என்ன...என்பதுபோல் கேட்டுக் கொண்டனர். ஒரு நிமிடம் அப்படியே நின்றவர்களின் கண்கள் வீட்டுக்குள் யாரையோ தேடியன. இளையவன் "அப்பா...."மெதுவாக குரல் கொடுத்துப் பார்த்தான். கண் விழித்துப் பார்த்தார் சாமி. மூத்தவன் முறைத்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டான். சற்று நேரம் ஒருவரும் எதுவும் பேசாமல் நெஞ்சுக்குள் வெப்பத்தை ஏற்றிக் கொண்டு நின்றனர். அதற்குள் சாமி எழும்பி உட்கார்ந்தார். "ஏன் நிற்கிறீங்க...உட்காருங்க" என்றார். "நாங்க உட்கார வரல...."என்றான் நடுலவன். மூவரையும் ஏற இறங்கப் பார்த்தார் சாமி. "அந்த பொம்பள எங்க..."நேராகவே விச...