Posts

Showing posts from May, 2022

குலோத்துங்க சோழன் அவையில் ஔவை

குலோத்துங்க சோழன் அவையில் ஔவை ஔவையின் மீது அரசர்களுக்கு எல்லாம் மரியாதை உண்டு.  ஔவையிடம் பேச தனிக்கவனம் வேண்டும். ஏடாகூடாவாக எதையாவது சொல்லி மாட்டிக் கொண்டு விழித்த கதைகள்  ஏராளம் உண்டு. எந்தப் பக்கம் நின்று பேசினாலும் எதிர்ப்பக்கம் நின்று கோல் அடித்துவிட்டு போய்க் கொண்டே இருப்பார். படைப்பாளிகள் ,கலைஞர் என்று எல்லா  தரப்பினரிடமும் ஏதோ ஒருவிதமான ஒரு போட்டி மனப்பான்மை எப்போதும் இருக்கும்.  அனைவருமே தங்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால்  படைப்பாளிகள் அனைவருக்கும் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பான்மையான படைப்பாளிகளிடமிருந்து வரும் பதிலாக இருக்கும். அவர்கள் படைப்பில் தரம் இருக்கலாம். ஆனால் அவற்றை வெளியில் கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் சரியாக இல்லாமையால் அவர்கள் திறமை உலகுக்குத் தெரியாமலேயே இருந்துவிடும். விளம்பரங்களும் விளம்பரப்படுத்த ஆட்களும் இருந்தால் மட்டுமே ஒருவரை அறிவாளி என்று உலகம் அடையாளம் கண்டு கொள்ளும்.  கம்பருக்கு குலோத்துங்க சோழன் புரவலராக வாய்த்தது போல எல்லா திறமையான புலவ...

தொல்காப்பியர் பார்வையில் புல்

தொல்காப்பியர் பார்வையில் புல் புல் என்றதுமே அறுகம்புல் ,கோரைப்புல் என்று வயலோரமாகவும் ஆற்றோரமாகவும் நீர்நிலைகள் அருகிலும் குத்துக் குத்தாக வளர்ந்திருக்கும் சிறிய செடிகள்தான் நினைவுக்கு வரும். இவைதான் புற்கள் என்பது நமக்குத் தெரியும். தென்னைமரமும் பனைமரமும் புல் என்றால் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கும். ஆனால் தென்னை மரமும் பனைமரமும் புல் என்கிறார் தொல்காப்பியர். யாரு தொல்காப்பியரா? தொல்காப்பியர் சொன்னால்  உண்மை இருக்கத்தான் செய்யும் என்பீர்கள். தொல்காப்பியர் தென்னை பனை எல்லாம் புல் என்பதற்கு அவர்கூறும் காரணம் நம்மை அசர வைக்கிறது ஆச்சரியப்பட வைக்கிறது. தொல்காப்பியரின் தாவரவியல் புலமையை எண்ணி வியக்க வைக்கிறது அப்படி என்ன ஆச்சரியப்படும்படி சொல்லிவிட்டார் என்கிறீர்களா? மரத்தின் தண்டுப்பகுதி இருக்கிறதல்லவா? அது கூடுபோல சத்து இல்லாமல் இருக்கும் மரங்களைப் பார்த்திருப்பீர்கள். தென்னை, பனை மரங்களை வெட்டும்போது உள்ளே சோறு  போன்ற பகுதி இருக்கும் . அப்படிப்பட்ட மரங்கள் எல்லாம் புல் வகையைச் சார்ந்தனவாம். அப்படியானால் தென்னை ,பனை மரங்கள்  எல்லாம் புல்லா ?என்று கேட்பீர்கள். நான்சொல்வதைவிட தொல...

நிற்பதுவே நடப்பதுவே....

நிற்பதுவே நடப்பதுவே.... உலகில் இருப்பவை யாவும் பொய்யா? மெய்யா? எது உண்மை? எது பொய்? இருக்கிறது ஆனால் இல்லை. இப்படி ஒரு குழப்பமான கேள்விகள் நம் அனைவர் மனதிலும் அவ்வப்போது வந்து போகும். அதற்கு விடை தெரியாது அப்படியே கடந்து வந்திருப்போம். அப்படி ஒரு கேள்வி பாரதியின் மனதிற்குள் எழ தன் உள்ளத்தில் தோன்றியதை உலகை நோக்கி வினவுகிறார் பாரதி. அவரே கேள்வி கேட்டு முடிவுரையாகப் பதிலையும் தந்து இப்படித்தான் உலகம் இருக்குமோ என்று நம்மையும் சிந்திக்க வைத்திருக்கிறார். பாரதி" உலகத்தை நோக்கி வினவுதல்" என்ற தலைப்பில் எழுதிய அந்தப் பாடல் உங்களுக்காக... நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந் தானா? பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ? உம்மில் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறுங் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்ததே போனதால் நானுமோர் கனவோ?- இந்த ஞாலமும் பொய்தானோ? காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்கள...

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

Image
       வீழ்வேன் என்று நினைத்தாயோ?                வயிற்றுக்காகத்தானே இந்தப்பாடு என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். எண்சாண் உடம்பில் ஒரு சாண் வயிறே பிரதானம் என்று வாழ்பவர்களைப் பார்த்திருக்கிறோம். அதெல்லாம் ஒரு வாழ்க்கையாங்க. வாழ்க்கை என்றால் எப்படி  இருக்க வேண்டும்? யாதோ பிறந்தோம்...இருந்தோம்... வாழ்ந்தோம் என்று இருக்கக்கூடாதுங்க. எந்தக் கவலையும் இல்லா வாழ்க்கை  வாழணுங்க... கவலை இல்லா வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைதான். ஆனால் இவை எல்லாம் நடக்குமா? நல்வினையோ தீவினையோ எல்லாம் இறைவன் செயல். நல்வினை எல்லாம் இறைவன் செயல். தீவினையுமா...? தீவினையும் அவன் செயல் என்றால் சற்று நெருடலாக இருக்கிறதே என்று கேட்கத் தோன்றும். "பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும் பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராய் இருப்பவர் இறைவன்" என்று பைபிளில் வாசிக்கவில்லையா? அப்படியானால் இதிலிருந்து தப்பிக்க என்னதான் வழி? ஒன்றும் செய்யமுடியாது. அதுவும் இறைவன் கையில்தான் இருக்கிறது. இறை...

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை செல்லடுவு அந்த வட்டாரத்தில் பிரபலமான   பெண்.     எந்த ஊரில் திருவிழா என்றாலும் டாண் என்று      முதல் ஆளாக வந்து நிற்பாள்.      திருவிழா என்றாலே வீட்டுக்கு வீடு       செல்லடுவு வந்தாளா? செல்லடுவு வந்தாளா?       என்ற கேள்விதான் அடிக்கடி கேட்கும்.           " செல்லடுவுக்கு சாப்பாடு கொடுத்தீர்களா?...      செல்லடுவுக்கு காப்பி கொடுத்தீர்களா? "     கேட்ட பின்னர்தான் எல்லா வீட்டிலும் உள்ள      ஆண்களும் சாப்பிடவே உட்காருவர்.          அந்த அளவுக்கு அனைவர் மனதிலும்      இடம் பிடித்திருந்தார் செல்லடுவு.     வீட்டுக்கு வீடு ஓடி ஓடி வேலை செய்வாள்.     ஒரு வீட்டுல வேலை செய்தாயிற்றே      சற்று ஓய்வெடுப்போம் என்று      ஒருபோதும் நினைப்பதில்லை.          "கீழத்தெரு அண்ணன் வீட்டில் கூப்பிட்டாகள...     .வடக்குத...

யார் அறிவாளி?

யார் அறிவாளி?  தூக்கணாங்குருவிக்கு  இணையான அறிவார்ந்த பறவை  வேறொன்றும் இல்லை. பின்னல் போன்ற அதன் கூடு  கலையார்வம் கொண்டோரும்  வியக்கும் வண்ணம் மிகவும்  நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கும். அது மட்டுமல்ல . தன் கூட்டிற்கு வெளிச்சம் வேண்டும் என்பதற்காக கூட்டின் உள்பக்கம் முழுவதும் சேற்றை அள்ளிப் பூசி  வைத்துவிடுமாம். சேறு காய்வதற்கு முன்பாக  மின்மினி பூச்சிகளைக் கொண்டுவந்து  சேற்றில் ஒட்டி வைத்துவிடுமாம். இதன் மூலம் கூட்டிற்கு நல்ல வெளிச்சம்  கிடைக்க வழி செய்து விடுமாம். இந்தச் சின்ன பறவைக்குள் இத்தனை அறிவா! வியப்பாக இருக்கிறதல்லவா!  தூக்கணாங்குருவியைப் போன்று   அனைவருக்கும் அறிவார்ந்த செயல்களில்   ஈடுபட வேண்டும் என்று ஆசைதான்.  ஆனால் நடக்கிற காரியமா என்ன?  அனைவருக்கும் அறிவின் மீது ஒரு   தாகம் உண்டு.  யாருமே தன்னை அறிவற்றவர் என்று  ஒத்துக் கொள்வதில்லை.  யாராவது தப்பித்தவறி முட்டாள்  என்று சொல்லிவிட்டால் போதும் ,  கோபம் தலைக்கு ஏறி தையதக்க...   என்று குதிக்க ஆரம்பித...

பணிநிறைவுப் பாராட்டு மடல்

                    பணிநிறைவுப் பாராட்டு மடல்                               தாமரைச்செல்வி                               தலைமை ஆசிரியை                கே.டி.கெய்க்வாட் மாநகராட்சி தமிழ்ப் பள்ளி        எங்கும்  தமிழுலா  பொங்கும் புகழுலா நல்லோர் உறைதலா (ல்) மாதவக்குறிச்சி பேருலா மாண்புலா வேலுமயில் பெருமாள் மடியுலா கண்டுலா வந்திட செந்தாமரை பூத்தலா!  அன்புலா ராஜூ கரம் பிடித்தலா இறைவகுத்தலா   தேனிலா கண்டுவத்தலா தெய்வீக ராகம் மீட்டலா  பால்நிலா பிள்ளை இருவராதலா (ல்) இல்லம் மகிழ்தலா வானிலா தாமரை கண்டு முகம் நாணலா ! அதிரா நடையுலா அழகு தேருலா  உதிரா புன்னகை உமக்கே உரித்தாதலா நதியாய் நடத்தலா(ல்) அமைதி ததும்பலா கதியாய் இயங்கலா(ல்) கதிராய் ஒளி வீசலா ! கொஞ்சு தமிழுலா எழுத்திலா நடையிலா  மிஞ்சு அன்புலா பேச்சிலா...

இன்சொல் இனிதீன்றல் காண்பான்....

இன்சொல் இனிதீன்றல் காண்பான்.... இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது "                       குறள் :.    99 இன்சொல் - இனிமை தரும் சொல் இனிதீன்றல்- இன்பம் தருவது காண்பான் - காணுதல்,அறிதல் எவன்கொலோ- எதனைக் கருதி வன்சொல் - கடுமையான சொல் வழங்குவது-பேசுவது,பயன்படுத்துவது இனிமை தரும் சொற்கள் இன்பம் வருவதைக் கண்டபின்னரும் ஒருவன் இன்சொல் பேசாது அதற்கு மாறான வன்சொல் பேசுவது என்ன பயன் கருதியோ? விளக்கம் : இனிமையான வார்த்தைகள் பேசுபவர்க்கும் இன்பம் பயக்கும்.கேட்பவர்களுக்கும் இன்பம் தரும். " இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம் வன்சொலால் மகிழாதே ....."என்பார் சிவப்பிரகாசர். இப்படி இனிமையான சொல்லால் உலகம் மகிழும் என்று தெரிந்த பின்னரும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி பிறர் மனதை நோகடிக்கலாமோ? உள்ளத்தில் கள்ளம் இல்லாதவர் பேசும் சொற்கள் இனிது. அவர்கள் ஒருநாளும் பிறருக்கு தீங்கிழைக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். அதனால்தான் " மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது "என்கிறார் தெரியாதவர்கள் வன்சொல் பேசினால் அது தவறல்ல. இன்சொல் இன...

நதி எங்கேபோகும்

நதி எங்கே போகும்? தாத்தா கையைப் பிடித்தபடி துள்ளித் துள்ளி நடந்து வந்தாள் மீனா. "என்ன...தாத்தாவும் பேத்தியும் காலையிலேயே  புறப்பட்டுடீங்க." கேட்டார் மதியழகன். "ஓடைக்கரைக்குப் போகணும் என்று ஒரே பிடிவாதம். அதுதான் கூட்டிட்டு போய் காட்டணும் என்று போறேன்." என்றார் வேதமுத்து தாத்தா. "அங்கே பார்ப்பதற்கு என்ன இருக்கு...? சீமைகருவேல மரமும் நாலு வேப்பம்மரமும் நிற்கு... உங்க பட்டணத்தை மாதிரி இந்த ஒண்ணும் கிடையாது " என்றார் மதியழகன். "சரி பட்டணத்துல இருக்கிற புள்ள. பார்க்க ஆசைப்படுது. கூட்டிட்டுப் போறேன்." என்றபடி பேத்தியின் கையை இறுக்கமாகப் பற்றியபடி நடந்தார்  வேதமுத்து. "தாத்தாவும் பேத்தியும் நல்லா பார்த்துட்டு வாங்க..." தாத்தா பேசிக் கொண்டிருக்கும்போதே கையைப் பிடித்து இழுத்தாள் மீனா. சரி. வாறேன்  என்று கையைப்பிடித்தபடி இருவரும் நடந்தனர். "தாத்தா இந்த பாதை எங்கப் போவுது ?" "நம்ம தோட்டத்துக்குத்தான்." "அப்போ  முன்னால ஒரு பாட்டி போறாங்க அவங்களும் நம்ம தோட்டத்துக்குதான் போறாங்களா ? " "இல்லை...அவங்க காட்டுக்கு கீரை...

எனைத்தானும் நல்லவை கேட்க

எனைத்தானும் நல்லவை கேட்க.... " எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்"                              குறள் : 416 எனைத்தானும் - எந்த அளவாயினும் நல்லவை - நல்ல அறிவு தருபவை கேட்க  - கேட்பீராக அனைத்தானும்-  அந்த அளவில் ஆன்ற-   சிறந்த,நிறைவான பெருமை - புகழ் ,பெருமை தரும்- கொடுக்கும் நல்லவற்றை எந்த அளவுக்குக்  கேட்கிறோமோ அந்த அளவுக்கு நிறைந்த  பெருமை வந்து சேரும். விளக்கம் : கற்றிலன் ஆயினும் கேட்க என்றார் வள்ளுவர். வள்ளுவரே கேளுங்கள் என்று சொல்லிவிட்டார் அதனால் எல்லாவற்றையும் இன்றுமுதல் கேட்கப் போகிறேன் என்று  கிளம்பிவிட வேண்டாம். எல்லாவற்றையும் கேளுங்கள் என்று வள்ளுவர் சொல்லவில்லை. எனைத்தானும் நல்லவை கேட்க என்றுதான் சொல்லியிருக்கிறார். அதாவது நல்லவற்றை மட்டுமே கேட்க வேண்டுமாம். நல்லவற்றை கேட்டால் என்ன கிடைக்கும்? என்று நீங்கள் கேள்வி கேட்பீர்கள் என்று வள்ளுவருக்குத் தெரியும். அதனால்தான் அப்படி நீங்கள்  நல்லவற்றைக் கேட்பீர்களானால்  நிறைவான பெருமை உங்களை வந்து ...

போராட்டம் இல்லாமல் வெற்றி இல்லை

போராட்டம் இல்லாமல் வெற்றி இல்லை வெகுநேரமாக தரையையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன இது சற்று புடைத்துக்கொண்டு... வெகுநேரம் வரை எனது கண்கள் வேறு எங்கும் நகர வில்லை. ஒருவேளை ஏதாவது புழுவாக இருக்குமோ? மறுநாளும் அதே இடத்தில் வந்து உட்கார்ந்தேன் மண் இன்னும் கொஞ்சம் புடைத்திருந்தது. பக்கவாட்டு மண் சற்று விலகி காற்றுக்கு இடம் கொடுத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு போராட்டம் நடக்கிறது. ஒரே நாளில் மண்ணை முழுவதும் அப்புறப்படுத்த முடியவில்லை என்று தெரிந்தது. சற்று மண்ணை விலக்கிப் பார்ப்போமா என்ற எண்ணம். வேண்டாம் எதுவாக இருந்தாலும் தானாகப் போராடி வெளியே வரட்டும். அதனை அதன் போக்கிலேயே விட்டுவிடு. மனம் தடுத்தது. மறுநாள் மெதுவாக  தளிர்  தலைதூக்கி எட்டிப்பார்த்தது. அதன் தண்டு கூனிக்குறுகி வளைந்து நெளிந்து  நிமிர முடியாமல்  போராடிக் கொண்டிருந்தது. ஓரிரு நாட்களில் தண்டின் போராட்டம் முடிந்து  கம்பீரமாக இரண்டு  இலைகளைக் தாங்கி நான் ஜெயிச்சுட்டேன் என்று சொல்லுவது போல் மலர்ச்சி தந்தது.   விதையின் போராட்டம் செடியாக வெளிவந்திருக்கிறது. இதுவரை தான் போராட்டம்.. அப்பாடா...என்று நிம்ம...

சங்க இலக்கியத்தில் நகைச்சுவை

சங்க இலக்கியத்தில் நகைச்சுவை நகைச்சுவையை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. நகைச்சுவை உணர்வு உள்ள  ஒருவரால் மட்டுமே  தான் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும். " நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்" என்பார் வள்ளுவர். நகைச்சுவை உணர்வு இல்லாதவர்க்கு இவ்வுலகம் பகலும் இரவுபோல்தான் ஒளியற்றதாக இருக்கும் .அதாவது அவர்கள் வாழ்க்கையில் ஒருநாளும்  மகிழ்ச்சி இருக்காதாம். நகைச்சுவை உணர்வு இல்லாதது அவ்வளவு கொடுமையானதா? நகைச்சுவைக்கு நம் வாழ்வையே புரட்டிப் போடும் வல்லமை உண்டு. காந்தியடிகள் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். அதனால்தான்" நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்குள் இல்லை என்றால் எப்பொழுதோ நான்  என் வாழ்க்கையை இழந்திருப்பேன்" என்று கடினமான தருணங்களைக் கடக்க உதவியது தன்னில் இருக்கும் நகைச்சுவை உணர்வுதான் என்று பதிவு செய்திருப்பார் காந்தியடிகள். நகைச்சுவை உணர்வு உள்ளவர்களால் மட்டுமே கடினமான சூழல்களையும் எளிதாகக் கடந்து போகமுடியும் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு. திரைப்படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகளுக்காகவே படம் பார்ப்பவர்கள் ...

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகு....

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகு... " உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்று படித்திருக்கிறோம். அதனால்தான் வேளாண்மை உயிர்நாடி என்கிறோம். விவசாயி வேளாண் தொழில் செய்யாவிட்டால்...எந்தத் தொழில் வளர்ச்சியடைந்தும் பயனில்லை. ஒரு வயிற்றுச் சாப்பாட்டுக்குத்தான் இத்தனை ஓட்டமும் ...ஓயா உழைப்பும்.. தூங்கா விழிகளும்... ஓய்வறியா உடம்பும்....ஓட்டமும் நடையும்... ஆனால் வயிற்றுக்குச் சாப்பாடு கிடைத்துவிட்டால் மட்டும் போதுமா?   அதனால் திருப்திபட்டுக்கொள்கிறோமா  என்றால் இல்லை என்பதுதான் உண்மை. ஒன்று கிடைத்தால் இன்னொன்றின்மீது நாட்டம். அதுவும் கிடைத்துவிட்டால்.... இன்னும் கொஞ்சம் வசதி வாய்ப்பைப் பெருக்கிக் கொள்ளலாமோ என்று ஆசை வந்து பிடறியைப் பிடித்து முன்னே தள்ள உட்கார நேரமில்லாமல்... சாப்பிட நேரம் எடுத்துக் கொள்ளாமல்.. பணத்தின் பின்னால்...  பதவியின் பின்னால்... பேரும் புகழும் பெற்றுவிட வேண்டும் என்ற ஒரு போதையில் ..... இப்படியாக நமது ஓட்டம்  ஒருநாளும் நின்றபாடில்லை. சரி.எல்லாம் கிடைத்துவிட்டது. இனி நிம்மதியாக வாழலாம் என்றால் வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த நேரத்தில் வந்து நிற்பார்களோ...

புறநானூறு கூறும் புலவரின் தன்மானம்

Image
புறநானூறு கூறும் புலவரின் தன்மானம் நம் அனைவருக்கும் புலவர் என்றதும் வறுமை தான் கண்முன் வந்து நிற்கும். புலவர்கள் மன்னர்களையும் செல்வந்தர்களையும் புகழ்ந்து பாடி பரிசில் பெற்று வாழ்க்கை நடத்துபவர்கள் தான் மறுப்பதற்கில்லை. ஆனால் வறுமையிலும் ஒரு செம்மை இருக்கும்.  தன்மானம் இருக்கும். நேர்மை இருக்கும். தகுதி இல்லாத எவரையும் புகழ்ந்து பாடாப் பண்பு இருக்கும். அறிவும் புலமையும் வள்ளல் தன்மையும் தகுதியும்  உள்ள அரசன் என்று அறிந்தால் எவ்வளவு தொலைவானாலும் சென்று பாடி பரிசில் பெற்று வருவர். எது எப்படியோ பரிசிலுக்காகத்தானே பாட்டு என்று நினைப்பீர்கள். அப்படி நினைத்திருந்தால் உங்கள் கருத்தை இன்றோடு மாற்றிக் கொள்ளுங்கள். தன் பாடலுக்குத்தான் பரிசில் பெற்றுக் கொள்வார்களே தவிர வெறுமனே புலவர் வந்திருக்கிறார் ஏதாவது கொடுத்தனுப்புங்கள் என்று சொல்லி பொருள் கொடுத்தால் பெற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள்.   பெருஞ்சித்திரனார்  என்ற புலவர் ஒருமுறை வெளிமான் என்ற மன்னனைக்  காணச் செல்கின்றார். மன்னன் புலவர் வந்திருப்பதை அறிந்து தன் தம்பிடம்  புலவருக்கு நிறைய பொருள்கொடுத்து அனுப...

நவில்தொறும் நூல்நயம் போலும்....

நவில்தொறும் நூல்நயம் போலும்.... " நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு"                குறள் : 783 நவில்தொறும்- படிக்கும் தோறும் நூல் - நல்ல நூல் நயம் - இன்பம் தருதல் போலும்- போன்றது பயில்தொறும்- பழகப் பழக பண்புடையாளர்- நற்குணமுடையவர் தொடர்பு - நட்பு படிக்கப் படிக்க இன்பம்தரும் சிறந்த நூலைப் போல பழகப் பழக இன்பம் தரக்கூடியது  பண்புடையவர்களோடு கொண்ட நட்பு. விளக்கம் : ஒரு நல்ல நூலைப் படிக்கிறோம். படித்த மாத்திரத்திலேயே அதன் முழு பொருளையும் நம்மால் அறிந்துகொள்ள முடியாது. திரும்பத் திரும்பப் படிக்கும் போதுதான் அந்த நூலின் பொருளை முழுமையாக உணர முடியும். சொல்லாட்சித்திறன்,அணிநலன் யாவற்றையும் உணர்ந்து அந்த நூலைப் பற்றிய பெருமையையும் சிறப்பையும் நம்மால் உணர முடியும். அது போன்றுதான் நல்ல  பண்புடையவர்களுடைய நட்பும் இருக்கும். பார்த்த மாத்திரத்திரத்திலேயே அவர்களைப் பற்றி நம்மால் முழுமையாக  உணர்ந்துகொள்ள முடியாது.  பழகப் பழகத்தான் அவர்களுடைய   நல்லியல்பை நம்மால்  முழுமையாக புரிந்து கொள்ள முடியும். ...

சாதி இரண்டொழிய வேறில்லை....

சாதி இரண்டொழிய வேறில்லை..... பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமையான்" என்றார் வள்ளுவர். பிறப்பால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டும் திறனுக்கு ஏற்ப வேறுபாடுகள் கண்டறிய முடியுமே  தவிர பிறப்பால் வேறுபாடு இல்லை. பிறப்பில் வேறுபாடு இல்லை எனில் இடையில் எங்கிருந்து நுழைந்தது இந்தப் சாதியப் பாகுபாடு.? உயர்ந்தவர் தாழ்ந்தவர் மேலோர் கீழோர் என்ற பகுப்பு எதனால் ஏற்பட்டது.? பணத்தால் எழுந்திருக்கலாம். செய்யும் தொழிலில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் அது எப்படி ஒரு குறிப்பிட்ட தொழில் செய்யும் பிரிவினர் தீண்டத்தகாதவர்  என்று ஒதுக்குவதற்கு காரணமாக இருக்க முடியும்?  தொழில் என்று பார்க்க வேண்டுமே தவிர  இது உயர்ந்த வேலை இது தாழ்ந்த  வேலை என்று சொல்ல முடியாது. ஒரு தொழிலில் தேர்ச்சி பெற்றவர் எல்லா தொழிலிலும் தேர்ச்சி பெற்றிருக்க மாட்டார். அவரவர் தொழிலில் அவரவர் பெரிய  ஆளாக இருப்பார்.  சாதாரண கொத்தனார் வேலைதானே என்று   சொல்லுவோம்.  செய்து பாருங்களேன். அதிலுள்ள நுட்பம்  தெரியாமல் விழிபிதுங்கிப் போவோம்.  சமையல் என்ன...