கள் என்ற பன்மை விகுதி வரும் இடங்கள்
கள் என்ற பன்மை விகுதி வரும் இடங்கள் கள் 'என்னும் பன்மை விகுதியைக் கையாள்வதில் நமக்கு பல்வேறு சந்தேகங்கள் உண்டு. ஆளாளுக்கு கள்ளை கண்டமேனிக்குப் பயன்படுத்துவார்கள். ' கள் 'அஃறிணைப் பன்மைக்கு மட்டுமே உரியதாக தொல்காப்பியர் கூறுவார். " கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி உடைய பலஅறி சொற்கே " அஃறிணையில் பன்மை வடிவங்கள் : மரம் + கள் = மரங்கள் யானை + கள் = யானைகள் ' கள் 'சேர்க்காமலும் அஃறிணை இயற் பெயர்கள் வரும். அவை முடியும் வினைகளைக் கொண்டு ஒருமையா அல்லது பன்மையா என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். " தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர் ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே " விகுதி இல்லாமல் வரும் அஃறிணைப் பெயர்கள் தமக்கு முன்னோ பின்...