கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும் கையில் ஊமன்.... அருமையான உவமை. சிந்திக்க வைக்கும் உவமை. நம்மைப் பிடறியில் தட்டி புரிய வைத்த உவமை. சில நேரங்களில் நம்மால் எதுவுமே பேச முடியாத நிலையில் இருப்போம். பேசத் தெரியும். ஆனால் பேச முடியாதபடி சூழல் அமைந்திருக்கும். கையைப் பிசைந்து கொண்டு நிற்போம். என்ன சொல்ல? ...!என்ன சொல்ல? ஒன்றும் சொல்ல முடியலியே... குறுக்கும் நெடுக்குமாக நடப்போம். பல்லை நறநறவென்று கடிப்போம். பார்ப்பவர்கள் எல்லாம் ஏன் இவன் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறான்? இவனென்ன கோழையா? என்று காது கேட்கும்படியாகப் பேசுவார்கள். ஆனால் என்ன செய்வது? சூழல் அப்படி அமைந்து போயிற்றே. இப்படிப்பட்ட சூழ்நிலை நம்மில் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். நான் கையாலாகாத நிலையில் இருக்கிறேன். என்னைத் தனியாக விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கடந்து போகப் பார்த்திருப்போம். சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். இதுதான் கையில் ஊமன் நிலை. இதே நிலையில்தான் குறுந்தொகையில் தலைவன் ஒருவன் இருந்திருக்கிறான். அவனிடம் அவன் நண்பர்கள் ஏன் இப்படி என்று கேட்டபோது நான் கையாலாகாத நிலையில் இருக்கிற...