Posts

Showing posts from February, 2021

அழக்கொண்ட எல்லாம் அழப்போம்....

Image
  அழக்கொண்ட எல்லாம் அழப்போம்..... அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை "                                     குறள் : 659 அழ - பிறர் அழுமாறு கொண்ட. -   கொள்ளப்பட்ட எல்லாம்-      அனைத்தும் அழ -       தாம் அழுமாறு போம் -  நீங்கிவிடும் இழப்பினும் - இழந்து போனாலும் பிற்பயக்கும் - திரும்பவும் வந்து சேரும் நற்பாலவை - நல்ல வழியில் வந்தவை பிறரை அழ வைத்து வஞ்சகத்தால் சேர்த்த பொருள் எல்லாம் ஒருநாள் அழதுஅழுது அவனைவிட்டுப் போய்விடும் . நல்லவழியில் சேர்த்த பொருள் கைவிட்டுச் சென்றாலும் தக்க நேரத்தில் திரும்பவும் கிடைத்துவிடும். விளக்கம் :  பிறருக்கு மன வருத்தம் கொடுத்து பொருள் ஈட்டுதல் கூடாது. பிறரை அழ அழ வைத்து அதனால் கிடைக்கும் பொருள் ஒருநாளும் நிலையாக இருக்காது. அவன் எப்படி பிறரை அழ வைத்தான...

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ....

Image
ஒழுக்கம் விழுப்பம் தரலான்....   " ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்                               குறள் : 131 ஒழுக்கம் - நன்னடத்தை விழுப்பம் - சிறப்பு , மேன்மை தரலான் - கொடுப்பதால் ஒழுக்கம் - நன்னடத்தையானது உயிரினும் - உயிரை விடவும் ஓம்பப் படும் - போற்றத்தக்கதாகும் ஒழுக்கம் எனப்படும் நன்னடத்தையே  ஒருவருக்கு  சிறப்பைக் கொடுப்பதாக இருப்பதால் அந்த ஒழுக்கமே உயிரைவிடவும் போற்றத்தக்க சிறப்புடையதாகும். விளக்கம் :  ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவர் மேன்மை பெற முடியும். ஆதலால் அந்த ஒழுக்கத்தை நம் உயிரைவிட மேலானதாக எண்ணிப் பாதுகாக்க வேண்டும். ஒழுக்கம் உடையவரையே உலகம் மதிக்கும். நம் பேச்சு, நடை, உடை  யாவற்றிலும் ஒரு கண்ணியம் காக்கப்பட வேண்டும். கல்வியால் மேன்மை கிடைக்கும். செல்வத்தால் சிறப்பு வரும். வீரத்தால் பெருமை அடையலாம். கொடையால் நன்மை விளையும். ஆனால் ஒழுக்கத்தால் கிடைக்கும் மேன்மை இவை எல்லாவற்றையும்விட உயர்வானது. உயிர்மீது அனைவர்க்கும் அளவு கடந்த  ஆசை உண...

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல்...

Image
               உறவினர் யார்? நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக இருப்பது உறவுகள். உறவுகள் சூழ இருந்தால்தான் மனதில் ஒரு மகிழ்ச்சி இருக்கும். உறவு என்பது வெறுமனே  இரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் என்பதல்ல. குடும்ப உறவுகளைத் தாண்டி நட்பும் உறவாகவே கருதப்படும். நம் இன்ப துன்ப காலங்களில் நட்பும் கரம் கோத்து உடன் நடப்பதுண்டு. எப்போதும்  நம்மைச் சுற்றி  ஒரு உறவு வளையம் இருந்து  கொண்டே இருக்கும். அதில் முதன்மையான உறவு குடும்ப உறவு என்றார் ஔவை. அதனால்தான், " கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி  பெறும் " என்று தனது பாடலில் சொல்லி வைத்தார் ஔவை. இதே ஔவை இன்னொரு பாடலில் தனது கருத்தில் சற்று மாறுபடுகிறார். அப்படி என்ன மாறுபடுகிறார் ?  ஔவை மாற்றி மாற்றி பேசுபவர் அல்லர். அப்படியானால் இந்த மாறுபாடு எதற்கு?  உறவு வேண்டுமா? வேண்டாமா? எனக்குள் ஆயிரம் கேள்விகள். கேள்விகள் எழுந்தால் விடையைத்தேடி யாரிடம் செல்ல முடியும் ? குழப்பமான மனநிலையோடு  தமிழாசிரியர் வீடு நோக்கிச் சென்றேன். என் குழப்பத்தை ஆசிரியரிடம் கூறி த...

தும்முச் செறுப்ப அழுதாள்....

Image
தும்முச் செறுப்ப அழுதாள்..... "தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்தீரோ என்று "                                குறள்  :  1318 தும்மு -  தும்மல் செறுப்ப  -  அடக்க அழுதாள் - கலங்கி அழுதாள் நுமர்  - உம்முடையவர் உள்ளல்  - நினைத்தல் எம்மை  - எங்களை மறைத்தீரோ  - மறைக்கின்றீரோ என்று - என்பதாக தும்மலை அடக்கினேன். உமக்கு வேண்டியவர்  நினைப்பதை என்னிடமிருந்து மறைக்கிறீரோ  என்று சொல்லி அழுதாள். விளக்கம் :  தும்மல் சாதாரணமான ஒரு செயல். ஆனால் நமக்கு அருமையானவர் யாராவது நினைப்பதால்தான் தும்மல் வரும் என்பது நம்மவர்களின்  நம்பிக்கை. தும்மல் வந்தால்  நூறாண்டு வாழ்க என  வாழ்த்துவது நம் மரபு.   யாரோ ...எங்கோ இருப்பவர் நினைக்கும்போது தும்மல் வருகிறது. அருகில் அருமையானவர் அமர்ந்திருக்கும்போது தும்மல் வருவதில் ஞாயம் இல்லை.    அன்புக்கு உரியவர் பக்கத்தில் நம் கண்  எதிரிலேயே இருக்கிறார்.  அப்படியானால் யார் நினைப்பதால் இந்...

தமிழர் பண்பாடு

Image
                 தமிழர் பண்பாடு பண்பாடு என்பது ஒரு இனத்தின் வரலாறு. இங்கு வாழ்வியல் முறைகள் பேசப்படுகின்றன. செய்தொழில்கள்,இறை நம்பிக்கை  பேசும் மொழி, உண்ணும் உணவு, கலைகள்,   யாவும் பண்பாட்டின் பாற்படும்.  தமிழர்  பண்பாட்டின் முக்கியகூறுகளாக  காதல், வீரம், கொடை, தெய்வ நம்பிக்கை,  விருந்தோம்பல் இவற்றைச் சொல்லி வருகிறோம்.   நாகரீகம் என்பது நமது திருந்திய வாழ்க்கை. பண்பாடு என்பது ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை முறை. இவை இரண்டும் சேர்ந்ததாகத்தான் ஒரு இனம் மதிப்பீடு செய்யப்படுகிறது. தமிழர் பண்பாடு உலகமே வியந்து பார்க்கக்கூடிய பண்பட்ட நெறிமுறைகளையும் விழுமியங்களையும் கொண்டது. வாழும் முறைதான் பண்பாடு. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரன்முறைக்கு உட்பட்டது நம் பண்பாடு. காதல் :  காதலும் வீரமும் நிறைந்தது தமிழர்  பண்பாடு.  தமிழர் காதலை அன்பின் ஐந்திணை   என்றனர்.இது ஒருவனும் ஒருத்தியும்  கொண்ட உளமொத்தத் தூய காதலாகும்.  இதனைக் களவு, கற்பு என இரண்டாகப்  பிரித்துப் பார்த்த...

பல கற்றோம் யாமென்று....

Image
பல கற்றோம் யாம் என்று. தற்புகழ வேண்டா... " கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு" என்பார் ஔவை. ஆனால் நிறைய புத்தகம் படிப்பவர்களுக்கு நமக்கு எல்லாமே தெரியும் என்ற நினைப்பு வந்துவிடும்.அதன் காரணமாக இயல்பாக ஒரு தற்பெருமை வந்து ஒட்டிக் கொள்ளும். எல்லாம் தெரியும் என்பது வேறு.  நமக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்பது வேறு. இப்படிப்பட்ட சிந்தை உள்ளவர்கள்  வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் மனதிற்குள் ஓர் ஓரத்தில் இந்தப் பெருமை பதுங்கியிருக்கும். நேரம் பார்த்து வெளியில் எட்டிப்  பார்த்து உள்ளேன் ஐயா என்று குரல் கொடுத்துச் செல்லும். "அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்" என்பார் அதிவீர ராமபாண்டியர். அந்த நினைப்பு கொஞ்சமாவது  மனதில் இருந்தால் தற்பெருமை வராது. படிப்பு என்பது வேறு. அனுபவ அறிவு என்பது வேறு. சில நேரங்களில் அனுபவ அறிவின்முன் புத்தக அறிவு தோற்றுப் போவதும் உண்டு. இதைத்தான் " ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்று சொல்வார்களோ? ஒருமுறை ஒரு வேளாண்துறை உயர் அதிகாரி ஒரு கிராமத்திற்கு வந்திருந்தார். அவர் அங்குள்ள விவசாயிகளை எல்லாம் அழைத்து அதிக மகசூல் விளைய ...

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்....

Image
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்..... " கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும் "                            குறள்   :575 கண்ணிற்கு _கண்ணுக்கு அணிகலம் _அணியப்படும் நகை கண்ணோட்டம் _இரக்கம் அஃதின்றேல் _அது இல்லையானால் புண்ணென்று _ வடு என்று உணரப்படும் _  அறியப்படும் கண்ணுக்கு அணிகலமாக அமைவது கண்ணோட்டம் என்று சொல்லப்படுகிற இரக்கமாகும். அந்த இரக்கம் இல்லாத கண்கள்  புண்கள் என்றே கருதப்படும். விளக்கம் : கண் அழகாக இருக்க கண்ணாடி போட்டுக் கொள்கிறோம். மை தீட்டுகிறோம். அலங்காரம் பண்ணும்போது கண்களை அழகாகக் காட்டுவதற்காக கண்களைச் சுற்றி ஒப்பனை செய்து கொள்கிறோம். ஆனால் அவை எல்லாம் கண்களுக்கு அழகாக மாட்டா.  கண்கள் என்றால் அதில் இரக்கம்   இருக்க வேண்டும்.  கருணை குடி கொண்டிருக்க வேண்டும். எவ்வளவுதான் ஒப்பனை செய்து கொண்டாலும் கண்களில் இரக்கமும் கருணையும் இல்லாவிட்டால் அந்தக் கண்கள்  இருந்தென்ன...இல்லாமல் போயென்ன? அவை கண்களாகவே கருதப்பட மாட்டாது. வெறும் புண்கள...

இயற்றலும் ஈட்டலும் காத்தலும்....

Image
  இயற்றலும் ஈட்டலும் காத்தலும்....  "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த  வகுத்தலும் வல்லது அரசு"                             குறள்  : 385 இயற்றலும் _ உண்டாக்குதலும் ஈட்டலும்  _ ஒரு வழித் தொகுத்தலும் காத்தாலும் _ காப்பாற்றுதலும் காத்த _ காப்பாற்றியவற்றை  வகுத்தலும் _ வகை செய்தலும் வல்லது _  வல்லமை கொண்டது அரசு _ அரசாங்கம் பொருள் ஆக்கும் வழிகளை உருவாக்கி,  ஈட்டியப் பொருளை மூலதனமாக தொகுத்து , காத்து  அதனை மக்களுக்குப் பயன்படும் வழியில்  செயல் திட்டங்கள் தீட்டி செயல்பட வல்லது அரசு. விளக்கம் : பொருள்செயல் வகையை ஆக்குதல்,  தொகுத்தல், காத்தல், அவற்றைப் பங்கீடு  செய்தல் என்ற நான்கு பணிகள் கொண்டதாக  ஓர் அரசு இருக்கும்.  இயற்றல் என்பதாவது பொருள்   வருவதற்கான வழிகளை  அறிகின்ற திறமை  கொண்டதாக அரசு  இருத்தல் வேண்டும்.  ஈட்டலாவது வரி , திறை, தீர்வை   போன்றவற்றின் மூலம்  முறையாக பொருளைத் தொகுத்து வைக்க ...

காளமேகமும் கண்ணதாசனும்

காளமேகமும் கண்ணதாசனும் காளமேகம் என்றாலே கார் மேகமென கவிமழை கொட்டும். அதில் தேன்சுவை கொட்டும். சொற்கள் முட்டி மோதும். எழுத்தும் பொருள் பேசும். எண்ணாத பொருள் எல்லாம் கூறி நம் எண்ணத்தைத் திசை திருப்பும். என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும் தாதூ என்று ஊதி தள்ளிவிடுவார் காளமேகம். அவருடைய கவிதைகளைப் படிக்கும்போது இது என்ன உளறலா...ஊமைகளின் உதடு பிதுங்கலா...வெற்று எழுத்துக்களின் அணி வகுத்தலா... என மயங்க வைக்கும். பொருள் விளங்கிய பின்னர் மிரள வைக்கும்.வியப்பில் விழி விரிய வைக்கும். " எல்லாச்  சொல்லும் பொருள் குறித்தனவே" என்பார் தொல்காப்பியர். எழுத்தை எந்தப் பக்கம் திருப்பி போட்டும் பொருள் தரும் சொல்லை உருவாக்கித் தரும் சித்து தெரிந்தவர் காளமேகம். ஒருநாள் காளமேகத்திடம் அவருடைய நண்பர் ஒருவர் வந்து "தகர வருக்க எழுத்துக்களை வைத்து ஒரு  பாடல் பாட முடியுமா?" என்று கேட்டுவிட்டார். "ஏன் முடியாது? இதோ இப்போதே பாடுகிறேன். கேளும் "என்றபடி பாடலைப் பாடினார். தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது தூதிதூ தொத்தித்த தூததே தாதொத்த துத்தித் தாதே துதித்துத்தே தொத்த...

வில்லேர் உழவர் பகைகொளினும்....

வில்லே ருழவர் பகைகொளினும்.... வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை "                 குறள்   :   812 வில் _வில் ஏர் _கலப்பை உழவர் _ உழுபவர் பகை _  பகைமை கொளினும் _ கொண்டாலும் கொள்ளற்க _ கொள்ளாதொழிக சொல்லேர்  உழவர் _  பேச்சுக்கலையில் வல்லவர்  பகை _  பகை வில் தொழில் செய்து போரிடும் பகைவரோடு பகைகொள்ளினும் கொள்ளலாம் ஆனால் சொல்வன்மை மிக்க அறிஞரோடு ஒருபோதும்  பகை கொள்ளக் கூடாது. விளக்கம் :  வில்லுடைய பகைவரைப் பகைத்துக்  கொண்டாலும் சொல்வல்லவரோடு பகை  கொள்ளக் கூடாது. வீரர்களோடு பகை கொள்ளலாம். விவேகம் உள்ளவரோடு பகை கொள்ளக் கூடாது. வலிமையால் வரும் கேடு பெருமளவில் இருக்காது. ஆனால் அறிஞர்கள், சொல்லாட்சித் திறமிக்க புலவர்களைப் பகைத்துக் கொண்டால் அதனால் வரும் கேடு அதிகமாக இருக்கும். அரசனுக்கு நல் ஆலோசனை சொல்லும் திறன்மிக்க அமைச்சர்களையும் மன்னன் ஒருபோதும் பகைத்திடக் கூடாது. அரசனுக்கு மட்டுமல்ல. நமக்கும்  ஏற்ற குறள். அறிவுள்ளவர் கூடவே இருக்கும்போதுதான் நல்வழிகளைக் கேட்டறிந்திட...

குலோத்துங்க சோழனுக்குப் பாடம் சொன்ன ஔவை

Image
குலோத்துங்க சோழனுக்குப் பாடம் சொன்ன ஔவை ஔவையின் மீது அரசர்களுக்கு எல்லாம் மரியாதை உண்டு. ஔவையிடம் பேச தனிக்கவனம் வேண்டும். ஏடாகூடாவாக எதையாவது சொல்லி மாட்டிக் கொண்டு விழித்த கதைகள் ஏராளம் உண்டு. எந்தப் பக்கம் நின்று பேசினாலும் எதிர்ப்பக்கம் நின்று கோல் அடித்துவிட்டு போய்க் கொண்டே இருப்பார். படைப்பாளிகள் ,கலைஞர் என்று எல்லா தரப்பினரிடமும் ஏதோ ஒருவிதமான ஒரு போட்டி மனப்பான்மை எப்போதும் இருக்கும். அனைவருமே தங்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால் படைப்பாளிகள் அனைவருக்கும் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பான்மையான படைப்பாளிகளிடமிருந்து வரும் பதிலாக இருக்கும். அவர்கள் படைப்பில் தரம் இருக்கலாம். ஆனால் அவற்றை வெளியில் கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் சரியாக இல்லாமையால் அவர்கள் திறமை உலகுக்குத் தெரியாமலேயே இருந்துவிடும். விளம்பரங்களும் விளம்பரப்படுத்த ஆட்களும் இருந்தால் மட்டுமே ஒருவரை அறிவாளி என்று உலகம் அடையாளம் கண்டு கொள்ளும். கம்பருக்கு குலோத்துங்க சோழன் புரவலராக வாய்த்தது போல எல...

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்...

Image
  அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்... " அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை"                                 குறள் :814 அமர் - போர் அகத்து - இடையில்  ஆற்றறுக்கும் - வலிமையைக் கெடுக்கும் கல்லா - பழக்கப்படுத்தப்படாத, பயிற்சியளிக்கப்படாத மா - குதிரை , விலங்கு தமரின் - தன்மையைவிட, உறவைவிட தனிமை - தனித்திருத்தல் தலை _ மேலானது, சிறப்பானது போரின்போது களத்தில் குப்புற தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரையைப் போன்றவரோடு கொள்ளும் நட்பைவிட எந்த உறவும் இல்லாமல் தனித்திருப்பது நலம். விளக்கம் :  குதிரைக்கு போருக்கான பயிற்சி கொடுக்கும்போது  இடதுசாரியும் வலதுசாரியும் குறுக்கு அறுத்தலும் நெடுகப் பாய்தலும் என்று எல்லாபக்கமும் சுழன்று சுழன்று பாயும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்குமாம்.  அப்படிப்பட்ட பயிற்சி அளிக்கப்படாத   குதிரை மீது ஏறி  போருக்குச் சென்றால் குதிரையானது  எதிராளிக்கு எதிராக சாதுரியமாகப் பாய்ந்து  போர்புரிவதை விட்டுவிட்டு தாறுமாறாக...

வரப்புயர நீருயரும்.....

Image
                                            வரப்புயர நீருயரும்  வாழ்த்து அனுப்ப வார்த்தைகள் தேடினேன்.  பல்லாண்டு பல்லாண்டு .... பல்லாயிரம் ஆண்டு வாழ்க! என்று வாழ்த்துவாயாக என்று வாழ்த்து ஒன்று ஓடி வந்து உச்சந்தலையில்  உட்கார்ந்து கொண்டது. வேறு ஏதாவது வாழ்த்து கிடைக்குமா ? முடிந்த மட்டும் மண்டையை  உருட்டிப் பார்த்தேன். வாழ்க வளமுடன் ! வாழ்த்துச் சொல்லி மகிழ்க என்று மற்றுமொரு வாழ்த்து வரிசைக்கு வந்து நின்றது. இவ்வளவுதானா? வளமான மொழியான என்  தாய்த்தமிழில் வாழ்த்திட  வார்த்தைக்குப் பஞ்சமா?  இருக்காது..... இருக்கவும் கூடாது.  என் தலைச்சோற்றில் கற்பனைக்குப் பஞ்சம். விளைந்தது என் சொல்லில் கஞ்சம். விஞ்சும் சொற்கள் கிடைக்காதா  கொஞ்சமென மனம் கெஞ்ச  கண்கள் துஞ்ச மறுத்தன . முட்டி மோதிப் பார்க்கையில்  மண்டைக்குள் ஓர் ஒளிக்கீற்று  மின்னலாய் வந்து போக....  புரட்டிடு புறநானூற்றை என்றுரைத்தது மனம்.  வாழ்த்தொன்று நான் தேட பத்தா...

நட்ட கல்லை தெய்வம் என்று...

  நட்ட கல்லை தெய்வம் என்று.... தமிழகத்தைச் சார்ந்த   பதினெட்டு சித்தர்கள் சித்தர்களுள் தலையாயச் சித்தர்களாக  கருதப்படுகின்றனர். இவர்கள் தவிர இன்னும் நூற்றுக்கணக்கான  சித்தர்களும் உண்டு. சித்தர்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டு இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தவர்கள் . பேரறிவு படைத்தவர்கள். எண் பெருஞ் சித்திகள் அதாவது அட்டமா   சித்திகளைப் பெற்றவர்கள்.  சித்தர்கள் என்றாலே நிறைமொழி மாந்தர்  என்று பொருள்படுவதாக பழந்தமிழ்   நூல்களில்  குறிப்புகள் உள்ளன.    சித்தர்கள் வான சாத்திரம் ,கைரேகை சாத்திரம்   தாவரவியல் நூல், சோதிட நூல்,கணித நூல்,   மாந்திரிகம் இரசவாதம் ,வைத்தியம்   போன்ற பல்வேறு துறைசார்    இலக்கியங்களைப்   படைத்துள்ளனர்.      பண்டைய அறிவியல் அறிவின் சிகரமாம்   சித்தவைத்தியம் பற்றி சித்தர்கள் பல பாடல்கள்   பாடியுள்ளனர்.   நமது உடம்புதான் பரமாத்மா. ஆதலால்  கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உன்னுள்ளும் இருப்பான் .  என்...

நிறைமொழி மாந்தர் பெருமை....

நிறைமொழி மாந்தர் பெருமை...... " நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் "             குறள். : 28 நிறை - நிறைந்த மொழி - சொல் மாந்தர் - மக்கள் பெருமை - சிறப்பு நிலத்து - உலகத்தில், பூமியில் மறைமொழி - அறவுரைகள், வாய்மொழி காட்டிவிடும் - தெரிவித்துவிடும் நிறைந்த  அறிவுடைய சான்றோர்  பெருமக்களின் சிறப்பை அவர்கள்  இவ்வுலகத்தில் கூறிச் சென்ற வாய்மொழிகளே காட்டிவிடும். விளக்கம் :  ஒருவரின் சிறப்பு அவர் பேசும் வார்த்தைகள் மூலம் வந்து சேரும். ஒருவர் நல்லவர் என்பதையும் தீயவர்  என்பதையும் அவரவர் பேசும் பேச்சின் மூலமாக கண்டறிந்து கொள்ளலாம். ஒருவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் பேசிய பேச்சு காலம் கடந்தும் அவரைப் பற்றிப் பேச வைக்கும். பேச்சும் நடத்தையும் மட்டுமே என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். ஒருவர் பேச்சின்மூலமாகத்தான் அவர் என்றென்றும் கொண்டாடப்படும் தலைவராக உயர்ந்து நிற்கிறார். மறைமொழி என்று கூறியதால்  வேதத்தை எடுத்துரைப்பவர்கள் என்று மட்டும் பொருள் கொள்ளுதல் கூடாது.  நற்சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள், அறவுரை...

தற்குறிப்பேற்ற அணி

          தற்குறிப்பேற்ற அணி செய்யுளுக்கு அழகு சேர்ப்பது அணி. செய்யுளில்  சொல்லழகு, பொருளழகு இரண்டும் கூடி இருக்கும்போதுதான் படிப்போருக்கு செய்யுளைப்  படிக்க வேண்டும் என்ற வேட்கை ஏற்படும். புலவர் தன் உள்ளக் குறிப்பைச் செய்யுளில் வெளிப்படுத்துவதற்காக அணி  இலக்கணத்தைக் கையிலெடுக்கும் இடங்கள் உண்டு.   இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின்மீது கவிஞர் தனது குறிப்பை ஏற்றிச் சொல்வது தற்குறிப்பேற்ற அணி எனப்படும். . " பெயர்பொருள் அல்பொருள் என இருபொருளினும் இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்"                                          - தண்டியலங்காரம் . அசையும் பொருட்கள் அசையாப் பொருட்கள் இவற்றின் இயல்பான செயலின் மீது புலவர் தன் குறிப்பை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணி என்கிறது தண்டியலங்காரம். தற்குறிப்பேற்ற அணி என்றதுமே  நம் நினைவில் பள்ளிப் பருவத்தில் படித்த சிலப்பதிகார காட்சி கண்முன் வந்து வந்து நிற்கும். ...

வெள்ளந்தி மனிதர்கள் யார் ?

வெள்ளந்தி மனிதர்கள் யார் ? கள்ளங்கபடமற்ற அப்பாவியாக ஒருவர்  இருந்தால் அவரை வெள்ளந்தியாக இருக்கிறாரே  என்று கூறுவோம். கிராமம் சார்ந்த கதைகளில் எப்படியும் வெள்ளந்தி மனிதர்கள் கதாப்பாத்திரம் இல்லாமல் இருக்காது.  அப்படிப்பட்ட கதைகளை வாசித்து... வாசித்து ...கிராமப்புற மக்கள் என்றால் வெள்ளந்தியாக இருப்பார்கள் என்று மனதிற்குள் ஒரு கணக்குப் போட்டு  வைத்துக் கொண்டோம். கிராமப்புற மக்கள் என்றால் கள்ளம் கபடமற்றவர்கள். எளிதில் யாரிடமும் ஏமாந்து விடுவார்கள். நகர்ப்புற மக்கள்  என்றால் ஏமாற்றுக்காரர்கள். ஏமாற்றுவதும் பணம் பண்ணுவதும்தான் இவர்கள் தொழில். இப்படித்தான் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும்  காட்டப்படுவதால் அனைவர் மனதிலும் அப்படிப்பட்ட ஒரு கருத்து ஆழமாகப் பதிந்து போய்விட்டது. உண்மை நிலை இதுதானா?  எனக்குள்ளே எழுந்த கேள்விக்கு விடை தேட முற்பட்டேன். இன்றைய காலக்கட்டத்தில் கிராமம் ... நகரம் என்று தனித்தனியாகப்  பிரிவுபட்டுக்  கிடக்கவில்லை.  எல்லோரும் தொலைத் தொடர்பு சாதனங்களால் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டோம். நகர்ப்புற மாணவனுக்குக் கிடைக்கி...