ஞானத்தைத் தேடு
நீதி சொல்லும் சேதி ஞானத்தைத் தேடு " ஞானத்தை வா என்று கூப்பிட்டு புத்தியைச் சத்தமிட்டு அழைத்து அதை வெள்ளி போல் நாடி புதையல்களைத் தேடுகிறது போல் தேடு" நீதிமொழிகள் 2 -(3 ..4) தேடல் என்பது அதிகாலை முதலே அனைத்து உயிரினங்களிடமும் தொடங்கிவிடும். பறவைகள் கூட்டைவிட்டு இரை தேட பறக்கின்றன. பட்டாம்பூச்சி அதிகாலையில் மலரும் பூக்களில் மதுவைத் தேடும். காட்டு விலங்குகள் எல்லாம் இரை தேட கிளம்பிச் செல்கின்றன. மனிதர்களிடமும் தேடல் பல விதமாக நடைபெற்றுக் கொண்டே இருக்கும். உணவுக்கானத் தேடல்... அறிவுக்கான தேடல்... பணத்திற்கான தேடல்... வேலைக்கான தேடல்.. ஆத்ம அமைதிக்கான தேடல்... என்று தேடல் பலவிதங்கள...