கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை....
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை.... கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும்" குறள் : 799 கெடுங்காலை- துன்பப்படுகின்ற காலத்து கைவிடுவார்- விட்டு விலகிச் செல்பவர் கேண்மை - நட்பு அடும் - வருத்தும் காலை- இறுதிக் காலத்தில் உள்ளிடும் - நினைத்தாலும் உள்ளம் - நெஞ்சம் சுடும் - எரியும்,வலிக்கும் துன்பப்படுகின்ற காலத்தில் கைவிட்டுவிட்டு சென்றவருடைய நட்பை வாழ்வின் இறுதிக் காலத்தில் நினைத்துப்பார்த்தால் கூட உள்ளம் வலிக்கும். விளக்கம் : நகுதல் பொருட்டல்ல நட்பு. தோழன் என்றால் ஒரு துன்பம் வரும்போதும் தோள் கொடுத்து நிற்க வேண்டும். நண்பனுக்கு ஒரு துன்பம் வரும்போது விட்டுவிட்டு ஓடி மறைந்து கொள்வது உண்மையான நட்பிற்கான அடையாளமாக இருக்க முடியாது. தன் உற்ற நண்பன் தனக்கு ஒரு கேடு வந்தபோது கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டான் என்பதை நினைக்கும்போதே உள்ளம் வலிக்கும். எந்தத் துன்பமும் துயரமும் சிறிது காலம் துன்பத்தைத் தருவதாக இருக்கும். காலம் ஆக ஆக அந்த நிகழ்வு நெஞ்சை விட்டு மற...