Posts

Showing posts with the label ஒன்றாமை ஒன்றியார் கட்படின்...திருக்குறள் விளக்கம்

ஒன்றாமை ஒன்றியார் கட்படின்....

ஒன்றாமை ஒன்றியார் கட்படின்... " ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது "                              குறள்: 886 ஒன்றாமை - மனம் பொறுந்தாமல் ஒன்றியார்-சேர்ந்து இருப்பவர்  கட் - கண்( வேற்றுமை உருபு            இடப்பொருளில் வந்துள்ளது) படின் - இருக்குமாயின் எஞ்ஞான்றும் - எக்காலத்திலும்,எந்த நேரத்திலும் பொன்றாமை - அழியாதிருத்தல் ஒன்றல்- ஒன்றுபடுதல் அரிது - உரியதாகும். நம்மோடு சேர்ந்து இருப்பவர் மனம் ஒன்றுபடாது  கூடவே இருப்பிராயின் அப்படிப்பட்டவரால் அழிவு வராதிருத்தல் அரிதினும் அரிது விளக்கம்:  மனதோடு ஒத்துப் போகாதவரோடு நட்பும் கூடாது. உறவும் கூடாது. ஒருவருக்கு நம்மோடு மனம்  ஒன்றிப் போகவில்லையா?  அவரிடமிருந்து ஒதுங்கி  இருந்து கொள்வது நல்லது. சிறிய பகைதானே எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்போம். அதுதான் பல நேரங்களில் பெரிய துன்பங்களுக்கு காரணமாக அமைந்துவிடும். மனவிரிசல் கண்ணாடியில் ஏற்படும் விரிசலுக்குச் சமமானது. ஒருநாளும் அது ஒட்டவே ஒட்ட...