Posts

Showing posts with the label திருக்குறள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்....

Image
      பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்....        " பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்   தொகுத்தவற்றுள் எல்லாம் தலை."                                         _   குறள்.  322  பகுத்துண்டு  _ பகிர்ந்து உண்டு  பல்லுயிர்  _  பல உயிர்களையும்  ஓம்புதல்   _  பாதுகாத்தல்  நூலோர்  _ அறநூல் ஆசிரியர்கள்  தொகுத்தவற்றுள்  _ தொகுத்துத் தந்தவற்றுள்  எல்லாம் _ அனைத்திலும்  தலை  _ தலையாய அறமாகும்    விளக்கம்  :    நம்மிடம் இருக்கும் உணவை பசியில்    இருப்போருக்கு பகிர்ந்து    கொடுத்து உண்ணவேண்டும்.    இவ்வாறு பல உயிர்களையும் பாதுகாக்க    வேண்டும் என்ற    பண்பானது அறங்கள்     என்று நூல்களில் சொல்லப்பட்ட    எல்லா அறங்களிலும் தலையாய     அறமாகக் கருதப்...

பரியது கூர்ங்கோட்டது...

Image
                பரியது கூர்ங்கோட்டது.... "    பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை     வெரூஉம் புலிதாக் குறின்  "                           குறள்.  :        599   பரியது  _  பெரிய உடம்பை உடையது    கூர்ங்கோட்டது  _ கூர்மையான கொம்பை உடையது   ஆயினும்  _  ஆனாலும்   வெரூஉம்  _ அஞ்சும்    தாக்குறின்  _ எதிர்த்து நின்றால்    விளக்கம் :    யானை பருத்த உடம்பும் கூர்மையான   கொம்புகளையும் கொண்டது.   ஆயினும் ஊக்கம் கொண்டு  புலி தாக்க    வருமானால்  அதற்கு  அஞ்சி நடுங்கி ஓடிவிடும்.             யானை பலசாலியான விலங்கு.  எதிரிகளைத் தாக்க வல்ல தந்தங்கள் உண்டு.  தூக்கி வீச தும்பிக்கை உண்டு.  இத்தனை இருந்தும் மனதில் ஊக்கம் கொண்ட  புலி தாக்க வருமானால் எதிர்த்து நிற்க இய...

உடுக்கை இழந்தவன் கைபோல...

Image
      உடுக்கை இழந்தவன் கை போல... "  உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே   இடுக்கண் களைவதாம் நட்பு "                                      குறள்  : 788                                      பொருள் : உடுக்கை _ உடுத்தியிருக்கும் ஆடை இழந்தவன் _ நழுவ விட்டவன் கைபோல _ கை உதவுதல் போல ஆங்கே _ அப்போதே இடுக்கண்_ துன்பம் களைவதாம்  _ அகற்றுவததாக இருப்பது நட்பு _ நல்ல நட்பு விளக்கம் : ஆடை நழுவினால் ஒரு நிமிடம்கூட தாமதியாமல் கையானது தானாகச் சென்று அதனைச் சரிசெய்வது போல நண்பனுக்கு ஒரு துன்பம் வரும்போது தானாக விரைந்து வந்து உதவுதல்தான் நல்ல நட்பாக இருக்கும். English couplet "   As han...

வெள்ளத்தனைய மலர் நீட்டம்...

Image
              வெள்ளத்தனைய மலர் நீட்டம்...     "    வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்       உள்ளத் தனையது உயர்வு."                                              குறள்  :  595 வெள்ளத்து  -நீரளவுக்கு அனைய - ஏற்ப    மலர் - நீர் தாவரங்களின் பூ  நீட்டம் _ நீட்சி மாந்தர்- மக்கள் தம் - தமது உள்ளத்து- மன ஊக்கத்துக்கு அனையது-ஏற்றாற் போலவே உயர்வு- உயர்ச்சி                             நீர்த் தாவரங்களில் மலரும்   மலர்களின் தண்டின் நீளமானது  தடாகத்தின் நீர்மட்டம் எவ்வளவு உயரம் இருக்குமோ அதற்கு ஏற்ப  உயரம் உடையதாக இருக்கும்.  அதுபோல ஒருவனுடைய மனதின்  ஊக்கம் எந்தஅளவு இருக்குமோ  அந்...

நகுதல் பொருட்டன்று நட்பு

Image
            நகுதல் பொருட்டன்று நட்டல்    " நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்    மேற்சென்று இடித்தற் பொருட்டு  "                                        குறள் : 784 நகுதல்  _ சிரித்து மகிழ்தல் பொருட்டன்று  _ என்பதற்காக   அல்ல நட்டல் _ நட்பு கொள்ளல் இடித்தல் _ கடிந்து சொல்லுதல் பொருட்டு _ என்பதற்காக விளக்கம் : நட்பு செய்தல் என்பது ஒருவரோடு ஒருவர் நகைத்து  மகிழ்வதற்காக  மட்டும் அன்று. வேண்டாத செயல்கள்  செய்யும்போது எடுத்துரைத்து அவரைத் திருத்துவதற்கும் உதவுவதாக இருத்தல் வேண்டும்.மிகுதியான தவறுகள்  செய்து துன்பத்தில் மாட்டிக்கொள்ள விடாமல் தடுப்பதாக   இருத்தல் மட்டுமே உண்மையான நட்பாக இருக்க முடியும்.  English Couplet : "  Nor for laughter only friendship all the pleasant day,   But for strokes of sharp reproving, when from           ...

செய்க பொருளை...

            செய்க பொருளை.....    " செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்      எஃகதனிற் கூரிய தில் "                                           குறள் : 759      ஒருவன் கண்டிப்பாக பொருளை ஈட்ட வேண்டும்.      நம் பகைவரின் ஆணவத்தை அழித்து வீழ்த்த வல்ல கூரிய ஆயுதம் செல்வத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. English couplet :      "Make money !Foreman's insolence o'ergrown       To lop away no keener steel is known " Explanation :         Accumulate wealth ; it will destroy the arrogance of your foes; there is no weapon sharper than it. Transliteration :              " seyka poruLaich cheRunhar serukkaRukkum              eqkadhaniR kooriya thil " ஒருவன் உலகத்தில் நன்றாக வாழ வேண்டும் என்று வ...