கட்டைவிரல் குருதட்சணையான கதை
கட்டைவிரல் குருதட்சணையான கதை "அண்ணா... குருதட்சணை...குருதட்சணை என்று கூறுகிறார்களே அது என்ன ?" "படிப்பதற்கு ஆசிரியருக்கு கொடுக்கும் பொருள் அல்லது பணம் குருதட்சணை. ஏன் திடீரென்று இந்தக் கேள்வி?" "பணமும் பொருளும்தான் குருதட்சணை என்கிறாய்...ஆனால் கட்டைவிரலையே குருதட்சணையாக கொடுத்தான் ஏகலைவன் என்று தொலைக்காட்சியில் பேசினார்களே....அது என்ன ?" "ஓ...அதுவா அது பெரிய கதை.. அந்தக் கதை எல்லாம் உனக்கு எதற்கு?" "ஏன் ...நான் தெரிஞ்சுக்கக் கூடாதா ?" "ஏன் கூடாது...எல்லோரும் தெரிந்து வைத்திருப்பதில் தப்பில்லை." "அப்படியானால் எனக்கும் அந்தக் கட்டைவிரல் கதையைச் சொல்லுங்களேன்." "ரொம்ப பிடிவாதம் பிடிக்காதே... உன்னை மாதிரியே காட்டில் ஒரு வேட்டுவ சிறுவன் இருந்தான்." "தனியாகவா...? " "சொல்லவிடேன்...தனியாக எப்படி இருப்பான்? தன் பெற்றோர்களுடன்தான் காட்டில் வசித்து வந்தான்.போதுமா ?" "எனக்காக பொய் கதை ஏதும் சொல்லலியே!" "இது புராணக்கதைப்பா.... நான் ஏன் பொய் ச...