அகர முதல எழுத்தெல்லாம்.....
அகர முதல எழுத்தெல்லாம்...... " அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " குறள். : 1 அகர _ 'அ ' எனத் தொடங்கும் அகர வரிசை முதல _ முதலாக உடையன எழுத்து _ எழுதப்படுவது, எல்லாம் _ அனைத்தும் ஆதி _ தொடக்கம் , மூலம் , அடிப்படை பகவன் _ இறைவன், படைத்தவன் ,முதல்வன், கடவுள், தலைவன் உலகு _ உலகம் எழுத்துகள் எல்லாம் அகரத்தை தமக்கு முதலாகக்கொண்டுள்ளன. அதுபோல உலகம் கடவுளை முதலாகக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது. விளக்கம் : எழுத்துகள் எல்லாம் அகரமாகிய எழுத்தை தமக்கு முதலாகக் கொண்டுள்ளன. அகரம்தான் நெடுங்கணக்கு எழுத்துகளில் முதன்மையானது. அகரம் எல்லா எழுத்துகளிலும் கலந்து, இயக்கி, தானும் தனியாக இயங்கும் தன்மை பெற்றது. அதுபோல இறை...