காக்கை கரைத்தால் விருந்தாளி வருவாரா?
காக்கை கரைத்தால்.... விருந்து வருமாயின் கரைந்து காட்டு. வாராதாயின் நடந்து காட்டு" இப்படி காக்கையைப் பார்த்து பள்ளிப் பருவத்தில் கூறியிருப்போம். காக்கை காலையில் இருந்தே கரைந்து கொண்டிருந்தால் இன்று நம்ம வீட்டுக்கு விருந்தினர் யாராவது வரப் போகிறார்களா? என்று அம்மா சொல்வதையும் கேட்டிருப்போம். இப்படி விருந்தினர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் ஒன்று உண்டு. ஒரு காலத்தில் விருந்துக்கு கட்டியம் கூறும் கட்டிடயங்காரர் நம் காக்கை யாராகத்தான் இருந்திருக்கிறார். விடுதியில் தங்கி படிக்கும்போது "கடிதம் வந்தால் பறந்து போ பார்வையாளர் வந்தால் நடந்து போ "என்று காக்கை பின்னால் இருந்த காலங்களும் உண்டு. இப்படி ஒரு நம்பிக்கை. இது மூட நம்பிக்கையாகவும் இருக்கலாம். எது எப்படியோ அதனால் கிடைப்பது ஒரு சின்ன மகிழ்ச்சி. காக்கை பறந்து போய்விட்டால் கடிதம் வரும் என்று தபால்காரரையே எதிர்பார்த்து இருந்த நாட்களும் உண்டு. காக்கை இருந்து பனம்பழம் விழுந்த கதையாக கடிதம் வந்து விட்டால் போதும் நான் சொன்னேன் அல்லவா? .....நான் சொன்னேனல்லவா? காக்கை பறந்து போனது என்று.... இதோ பார்... எனக்குக்...