வலவன் ஏவா வான ஊர்தி
வலவன் ஏவா வான ஊர்தி புறநானூறு பாடல் என்றாலே மன்னர்களைப் புகழ்ந்து பாடுவதாகத்தான் இருக்கும். மிகையான புகழ்தல் இருக்கும். காரணம் அப்போதுதான் பரிசில் கிடைக்கும் என்று அவ்வாறு புலவர்கள் பாடுவர். ஒரு சில புலவர்கள் மன்னன் தவறு செய்தால் இடித்துரைப்பதாகவும் பாடல்கள் பாடியுள்ளனர். தூது போன வரலாறும் உண்டு. எனினும் புலவர்கள் என்றால் பரிசிலுக்காகப் பாடுபவர்கள் என்ற எண்ணம் பரவலாக அனைவர் மனதிலும் இருப்பதுதான் உண்மை. பரிசிலுக்காகப் பாடுவதாக இருந்தாலும் அதில் உலகியல் இருக்கும். உணர்வு இருக்கும். நம்மைச் சுற்றி நடக்கும் எதார்த்தத்தை உணர்த்துவதாக இருக்கும். மன்னனுக்கு மட்டுமல்லாது நமக்கும் சில செய்திகள் சொல்லப்பட்டிருக்கும். அதனால்தான் இன்றுவரை புறநானூற்றுப் பாடல்கள் நம்மால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடலை வாசியுங்கள். சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தன் என்னும் புலவர் புகழ்ந்து பாடுகிறார். பாடல் பரிசிலுக்காகப் பாடப்பட்டதாக இருக்கலாம். பாடலுக்குள் அவர் பொதிந்து தந்திருக்கும் கருத்து என்ன என்று பாருங்கள். உலக நிலைமை இதுதா...