Posts

Showing posts from June, 2025

தமிழ்ப் போட்டி

தமிழ்ப் போட்டி காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம்  தங்கள் குட்டிகள் படிப்பதற்காக ஒரு பள்ளியை ஆரம்பித்தன. பள்ளி ஆசிரியராக  கரடி அண்ணா நியமிக்கப்பட்டார். ஒரு நாள் பள்ளியை மேற்பார்வையிட வந்த காட்டு ராசா சிங்கம் மாணவர்களுக்கு ஒரு போட்டி  வைக்கும்படி ஆசிரியரிடம்  கேட்டுக் கொண்டார். ஆசிரியரும் மாணவர்களின் தமிழ் அறிவு எப்படி இருக்கிறது என்று அறிவதற்காக போட்டி ஒன்று நடத்துவது என்று தீர்மானித்தார். ஆலமரம் போட்டி நடைபெறும் இடமாக  அறிவிக்கப்பட்டது. பதினொரு மணிக்கு எல்லா விலங்குகளும் ஆலமரத்தடியில் வந்து கூடும்படி அறிவிக்கப்பட்டது. அதன்படி  எல்லா விலங்குகளும்  குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே  ஆலமரத்தடியில் வந்து நின்றன சிங்கத்தின் தலைமையில் போட்டி தொடங்கியது. ஆசிரியர்  போட்டியை நடத்துவதற்குத் தயாராக வந்து நின்றார். முதலாவது   போட்டியின் விதிமுறைகளைத்  தெரிவித்தார் ஆசிரியர்.  விடை தெரிந்தவர்கள் கையை உயர்த்த வேண்டும். முதலாவது கையை உயர்த்துபவருக்கு முதல் வாய்ப்பளிக்கப்படும். யாரும் முணுமுணுக்கவோ கையசைப்பின் மூலமோ பிறருக்கு உதவுதல் கூடாது. அப்பட...

கலைந்து போன கனவு

கலைந்து போன கனவு  ரதி வீட்டின் ஒரு மூலையில்  கண்மூடி கிடந்தாள். ஏதேதோ நினைவுகள் வந்து என்னென்னவோ பேச ஆரம்பித்தன. வேண்டாம்....போதும்...போதும்.. என்று உரக்க கத்த வேண்டும் போல் இருந்தது. இனி உரக்க கத்தி என்ன பயன் ? கத்துவதற்கு வார்த்தைதான் வருமா ?  எத்தனைமுறை அம்மாவையும் தங்கைகளையும் உரக்க பேசி  வாயை மூட வைத்திருப்பாள். எதற்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசுவது... யார் என்ன சொன்னாலும் ஏற்பதில்லை.... தான் சொல்லுவது மட்டும்தான் சரி என்ற ஆணவப் போக்கு. அந்த பேச்சு ...ஆணவம்....எல்லாம் ஒரே நாளில் மொத்தமாய்  அடங்கிப் போயிற்று.. வேலைக்குப் போகிறோம் என்று எவ்வளவு துள்ளலாக புறப்பட்டு வந்தாள்.  முதல்முறையாக தான் சுயமாக சம்பாதிக்கப் போகிறேன்....அப்பப்பா இனி ஒரு சேலை எடுப்பதற்கு அம்மாவிடம் கெஞ்ச வேண்டியதில்லை. நினைத்த நேரத்தில்... நினைத்த கலரில் வாங்கிக் கொள்ளலாம். யாரும் ஏன்? எதற்கு என்று கேட்க முடியாது. எத்தனை எத்தனை கற்பனைகள். எவ்வளவு எதிர்பார்ப்புகள்.... எல்லாம் பொசுக்கென்று தீயின் முன் இருக்கும் தாள் போல கருகி காணாமல் போனது. இப்படி ஒரு வேலை என்று நினைத்துக்கூட பார்க்கவில்ல...

புதியதோர் உலகம் செய்வோம்

புதியதோர் உலகம் செய்வோம் "தமிழுக்கு அமுதென்று பேர்_ அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் " என்ற தேன்தமிழ்ப் பாடல் வரிகளைத் தந்து என்நேரமும் காதுகளில் தேனிசையாய் ஒலித்துக் கொண்டிருப்பவர் பாரதிதாசன். உலகில் மாற்றங்கள் நிகழ்வதும் அதை நாம் ஏற்றுக் கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருவதும் இன்று நேற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல் அல்ல. மாற்றங்களை நோக்கிய பயணம் எல்லா காலங்கிலும் நடைபெற்று வந்திருக்கிறது. அந்தப் பயணம்தான் புதிய படைப்புகளையும் புதுமைகளையும் கொண்ட புதிய சமுதாயத்தைப் படைக்கும். பழைமையிலேயே இருந்து கொண்டால் புதுப்பித்தலைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் ஒரு முடக்கம் ஏற்பட்டுவிடும். முடமாகிப் போவோம். எப்போதும் புதியவற்றை அறிய வேண்டும் புதிய சமுதாயத்தைக் காணவேண்டும் என்ற கனவு எல்லோரிடமும் இருக்கும். இருக்க வேண்டும். அதுதான் செயலாக்கத்துக்கு வித்திடுவதாக அமையும். நமது கனவு செயல்வடிவம் பெறும்போது சமூகமும் சமூக நடைமுறைகளும் புதிப்பிக்கப்பட்ட நிலையில் புதிய பரிணாமத்தை எட்ட வாய்ப்பு ஏற்படும். மாற்றம் தனிமனிதனால் ஏற்பட்டுவிடாது. ஒருங்கிணைந்து செயலாற்றினால் மட்டுமே புதிய உலக...

காலத்தினால் செய்த நன்றி

Image
காலத்தினால் செய்த நன்றி...... (குறளும் குயிலும் ) கோடைகாலம்.பல நாட்களாக மழை காணா பூமி. வறட்சியின் பிடியில்  மாட்டிக்கொண்டு விலங்குகள் எல்லாம் பரிதவித்தன.  நீருக்காக விலங்குகள் அங்குமிங்கும் ஓடின.  தாகம் யாரைத்தான் விட்டு வைத்தது.....?        நீர் நிலைகளைத் தேடி மான் ஒன்று   காட்டுக்குள் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்தது.     காடு முழுவதும் தேடியது...தேடியது.  தேடிக்கொண்டே இருந்தது. கால்கள் ஓய்ந்து போனதுதான் மிச்சம். ஒரு சொட்டு நீரையும்  கண்ணால் பார்க்க முடியவில்லை.      கால்  கடுத்தது. கடுகளவு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. இனி தன்னால் ஒரு அடி கூட   எடுத்து வைக்க முடியாது என்ற நிலை.  களைப்பில் அப்படியே கீழே விழுந்தது மான். நாக்கு வறண்டு போயிற்று.   எழும்பி நடக்கவும் உடலில் தெம்பில்லை.  நட்ட நடுவெயில்.   நிலம்  அனலாக கனன்று கொண்டிருந்தது.   வெப்பம் தாங்க முடியாத மான்    மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க பரிதாபமாக...

பொறுமை போராளிகளின் ஆயுதம்

பொறுமை போராளிகளின் ஆயுதம்  " நேரமும் பொறுமையுமே போராளிகளின் பலம் " என்றார் டால்ஸ்டாய். உங்கள் திறமையை வெற்றியாக  மாற்றிக் கொடுக்க உதவுவது உங்கள் பொறுமை மட்டுமே. பொறுமையாக உழைப்பைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். பொறுமை உடையவன் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறானோ அதை சாதிக்காமல் ஓயமாட்டான். ஒரு வெற்றியை நோக்கிப் பயணிக்கும்போது இடையில் பல இடையூறுகள் வரலாம். நதிபோல நாம் எல்லாத் தடைகளையும் தாண்டி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் போய்ச் சேர வேண்டும் என்று நிர்ணயித்து வைத்துள்ள இலக்கை அடைய முடியும். பொறுமையும் காத்திருப்பும்  உழைப்பவரோடு கூட்டு சேர்ந்து கொண்டால்  வெற்றியை எவராலும் தடுத்து  நிறுத்திவிட முடியாது. பொறுமைக்கு நல்ல எடுத்துக்காட்டாக சீனாவில் வளரும் ஒருவகையான மூங்கில் செடியைக் கூறுவர். சீன மூங்கில் செடியானது  நட்டதுமே விறுவிறுவென்று வளர்ந்துவிடாது. என்னதான் உரம் போட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்த்தாலும் வளர்வேனா என்று அடம் பிடிப்பதுபோல அப்படியே வளராமல் நிற்கும். நான்கு ஆண்டுகள் செடியில் பெருமளவிலான  எந்தவித  வளர்ச்சியும் தென்ப...

தொண்ணூறும் தொள்ளாயிரமும்

தொண்ணூறும் தொள்ளாயிரமும் ராகவன் கையைப்  பிடித்துக் கொண்டு துள்ளல் போட்டு நடந்து வந்தாள் தாரணி. தாரணி தமிழாசிரியர் ராகவனின் பேத்தி. நேற்றுதான் நகரத்திலிருந்து ஊரிலிருக்கும் தாத்தா வீட்டிற்கு  வந்திருந்தாள். வந்த நேரத்திலிருந்து தாத்தா ஆற்றைப் பார்க்கப் போகவேண்டும்  என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். இன்று காலையிலேயே இருவரும் ஆற்றை நோக்கி நடந்து வந்தனர். வரும் வழியில் ஆற்றோரமாக நிற்கும் பனை மரங்களை எல்லாம்  எண்ணிக் கொண்டே வந்தாள் தாரணி. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என்று சொல்லிக் கொண்டு வந்தவள் ஒன்பது என்பதைச் சொன்னதும் தாத்தாவின் முகத்தைப் பார்த்தாள். "என்ன ?"என்றார் தாத்தா. "தாத்தா இந்த எண்களுக்கு எல்லாம் யார் பெயர் கொடுத்தது தாத்தா?" "நம் முன்னோர்கள் எண்களை  அடையாளப்படுத்துவதற்காக ஒவ்வொரு  பெயரிட்டு வேறுபடுத்தி சொல்லி இருக்கிறார்கள்." "அப்படியானால் இவை இடுகுறிப்  பெயர்கள் இல்லையா தாத்தா?" "ஆம்...எந்த ஒரு காரணமும் கருதாது நம் முன்னோர்கள் இட்டு வழங்கியப் பெயர்கள் இடுகுறிப் பெயர்கள் " "அப்படியானால் எல்லா எண்களு...

பினாங்கு மாப்பிள்ளை

பினாங்கு மாப்பிள்ளை  கண்ணம்மோ ... கண்ணம்மோ... மூச்சிரைக்க கண்ணம்ம வீட்டு வாசலில் வந்து நின்றான் முத்துசாமி. "ஏல...என்ன இந்த ஓட்டம் ஓடியார... என்னமும் அவசரமா?" "அம்மதான் உங்கள் கையோட கூட்டிவரச் சொன்னாவ" "இந்தா வாரேன்னு சொல்லு" "வாங்க... உடனே வரணுமாம்" "அப்படி என்ன தல போற அவசரம்" "வாயேன்....நேரத்த போக்காத. எங்க பசு குட்டிப் போடப்போவுது... அதுதான் அம்ம கூப்பிட்டுட்டு வரச்சொன்னாவ..." கையைப்பிடித்து இழுத்தான் முத்துசாமி. கூடவே போனார் கண்ணம்ம. இப்படி நாளும் கண்ணம்மயை தேடி யாராவது வந்துவிடுவர். மாட்டுக்கு ஒண்ணுன்னாலும் மனுசனுக்கு ஒண்ணுன்னாலும் கூப்பிடுங்க கண்ணம்மய இதுதான் ஒவ்வோர் வீட்டிலும் கேட்கும் குரலாக இருக்கும். கண்ணம்மாவைத்  தெரியாதவர் யாரும் அந்த ஊரில் இருக்க முடியாது.  அவ்வளவு பிரபலம். எல்லாருக்காகவும் ஓடி ஓடி  உதவும் குணம்.  ஊருல ஒருத்தருக்கு ஒன்று என்றால்  முதல் ஆளாக ஆஜர் ஆகி நிற்பது  கண்ணம்ம மட்டும்தான். கைப்பிள்ளைகளுக்கு மருந்து கொடுக்கணுமா... கண்ணம்மயத் தவிர யாரும் அவ்வளவு பக்குவமா மருந்து கொடுத்திட முடியாது. எந்த வீட்டி...

உண்டி கொடுத்தோர்உயிர் கொடுத்தோரே

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மை  வரிசையில் நிற்கும் பெருமை கொண்டது புறநானூறு. புறநானூற்றில் இரண்டு பாடல்கள்  குடப்புலவியார் என்ற புலவர் பாடியுள்ளது. இவர் பாடிய  இரண்டு பாடல்களுமே  பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியதாக அமைந்துள்ளது.  பழங்காலத்தில் புலவர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பாடி  பரிசில் பெற்றுச் செல்வர்.  சில புலவர்கள் மன்னன் தவறு செய்யும் போது   இடித்துரைத்து நல்வழிப் படுத்துவதற்காகவும்  பாடியுள்ளனர்.  புலவர்கள் நல்ல அமைச்சராக இருந்து அரசியல்  நுணுக்கங்களைச் சொல்லித் தருவதற்காகவும்  பாடல்களைப் பயன்படுத்தியள்ளனர்.    இந்த உலகத்தில் நாம் துய்ப்பதற்கு   அவசியம் செல்வம் வேண்டும். வாழும் காலத்தில் புகழ்   வேண்டுமானால் செல்வத்தின்  மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.  இரண்டு உலகங்களின் புகழையும் பெற   வேண்டுமானால் மண்ணுலகில்  நீர்நிலைகளை ஏற்படுத்தி வளங்களைப்   பெருக்குக என்று  நெடுஞ்செழியனுக்கு   அறிவுரை கூறுவத...

கோபம் வேண்டும்

கோபம் வேண்டும்  'சினம் தவிர் 'என்றுதானே சொல்வார்கள். இது என்ன  வேண்டும்...வேண்டும்... கோபம் வேண்டும். "  சும்மாவே  நான் காச் ...மூச் என்று  கத்திவிட்டு கையில் கிடைத்ததை  எல்லாம் தூக்கி வீசுவேன்.   எத்தனை போனை உடைத்திருக்கிறேன் தெரியுமா?"பெருமைப்பட்டுக் கொள்வது   காதுகளில் கேட்கிறது. "இல்லை...இல்லை... நான் எல்லாம் ரொம்ப...ரொம்ப நல்ல பிள்ளை.  ரிமோட் கண்ட்ரோலை மட்டும்தான்   தூக்கி வீசுவேன்." இப்படியும் சிலர்   பேசுவது போல் இருக்கிறது. " என்னிடம் இந்த உடைத்தல்...கிடைத்தல்  எல்லாம் கிடையாது.கோபம் வந்தால் பேனாவால் நோட்டுப் புத்தகத்தில்   கிறுக்கோ கிறுக்கென்று கிறுக்கி  தள்ளி விடுவேன்."  இது பள்ளி மாணவர்களின் கிறுக்கலாகத்தான் இருக்கும். மனிதர்களிலும் சிலர் இப்படி இருக்கலாம்.  "நாங்கள் எல்லாம் வேற...வேற...    வேற மாதிரி.  சும்மா நச்சு... நச்சுன்னு   தலையணையில் நாலு குத்து குத்திவிட்டு   அந்த இடத்தில் இருந்து   எஸ்கேப் ஆகி விடுவோமில்ல..." ...