தமிழர் பண்பாடு
தமிழர் பண்பாடு பண்பாடு என்பது ஒரு இனத்தின் வரலாறு. இங்கு வாழ்வியல் முறைகள் பேசப்படுகின்றன. செய்தொழில்கள்,இறை நம்பிக்கை பேசும் மொழி, உண்ணும் உணவு, கலைகள், யாவும் பண்பாட்டின் பாற்படும். தமிழர் பண்பாட்டின் முக்கியகூறுகளாக காதல், வீரம், கொடை, தெய்வ நம்பிக்கை, விருந்தோம்பல் இவற்றைச் சொல்லி வருகிறோம். நாகரீகம் என்பது நமது திருந்திய வாழ்க்கை. பண்பாடு என்பது ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை முறை. இவை இரண்டும் சேர்ந்ததாகத்தான் ஒரு இனம் மதிப்பீடு செய்யப்படுகிறது. தமிழர் பண்பாடு உலகமே வியந்து பார்க்கக்கூடிய பண்பட்ட நெறிமுறைகளையும் விழுமியங்களையும் கொண்டது. வாழும் முறைதான் பண்பாடு. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரன்முறைக்கு உட்பட்டது நம் பண்பாடு. காதல் : காதலும் வீரமும் நிறைந்தது தமிழர் பண்பாடு. தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர்.இது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூய காதலாகும். இதனைக் களவு, கற்பு என இரண்டாகப் பிரித்துப் பார்த்த...