அளபெடை என்றால் என்ன?
அளபெடை என்றால் என்ன? செய்யுளின் ஓசை குறையும்போது ஒரு சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கும் நெட்டெழுத்துகள் தமக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து நீண்டு ஒலிக்கும். அவ்வாறு நீண்டு ஒலிப்பதை அளபெடை என்கிறோம். அளபெடையின் வகைகள்: அளபெடை இரண்டு வகைப்படும். 1. உயிரளபெடை 2. ஒற்றளபெடை முதலாவது உயிரளபெடை என்றால் என்ன என்று பார்ப்போம். ஒரு செய்யுளின் ஓசை குறையும்போது அந்த ஓசையை நிறைவு செய்ய ஏழு உயிர் நெடில் எழுத்துகளும் அளபெடுத்து வரும். இதனை உயிரளபெடை என்பர். அதாவது உயிர் நெடில் எழுத்துகளான ஆ., ஈ., இ., ஏ. ,ஐ. ,ஓ. ,ஔ ஆகிய எழுத்துகளின் இன எழுத்துகள் அளபெடுத்து வரும். இந்த ஏழு உயிர் நெடில் எழுத்துகளுக்கும் ஐந்து உயிர்க்குறில் எழுத்துகளும் இன எழுத்துகளாகும். அவற்றைப் பார்ப்போம். ஆ -அ ஈ -இ ஊ - உ ஏ -எ ஐ -இ ஓ. - ஒ ஔ ...