வினையாலணையும் பெயர் என்றால் என்ன
வினையால் டையும் பெயர் என்றால் என்ன ஒரு வினைமுற்று வினையை உணர்த்தாது அவ்வினைக்கு உரிய கருத்தாவை உணர்த்தி, எழுவாயாக நின்று, வேற்றுமை உருபை ஏற்றும் ஏற்காமலும் வருவது வினையாலணையும் பெயர் எனப்படும். மனப்பாடமாகப் படித்துவிட்டோம். இப்போது வினைமுற்று என்றால் என்ன?என்ற கேள்வி எழுகிறது. ஒரு வினைச்சொல்லானது ஒரு செயல் முடிவுற்ற நிலையில் அது வினைமுற்று என்று அழைக்கப்படும். மாதவன் பாடினான் . மலர் ஆடினாள். தலைவர் கொடுத்தார். கொடி அசைந்தது பறவைகள் பறந்தன. பாடினான்,ஆடினாள்,கொடுத்தார், அசைந்தது,பறந்தன இவை முற்று பெற்ற வினைச் சொற்கள் ஆதலால் வினைமுற்று என்கிறோம். இப்போது வினையாலணையும் பெயருக்கு வருவோம். ஆடியவன் பரிசு பெற்றான். ___________ பரிசு பெற்றவர் யார் என்ற கேள்விக்கு விடையாக வருவது எது? ஆடியவன். இங்கே 'ஆடியவன் 'வினையாலணையும் பெயர். ஆடியவன் பெயர்த்தன்மை பெற்று வந்துள்ள வினையாலணையும் பெயர். பாடியவனுக்கு பணம் வழங்கப்பட்டது. _______________ பாடியவனுக்கு என்ற சொல்லில் நான்காம் வேற்றுமை உருபான 'கு' சேர்ந்து வந்துள்ளது. இது வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ள வினையாலணையும் பெயர் ஆகும். வி...