புதியதோர் உலகம் செய்வோம்....
புதியதோர் உலகம் செய்வோம்.... " தமிழுக்கு அமுதென்று பேர்_ அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் " என்ற தேன்தமிழ்ப் பாடல் வரிகளைத் தந்து என்நேரமும் காதுகளில் தேனிசையாய் ஒலித்துக் கொண்டிருப்பவர் பாரதி தாசன். உலகில் மாற்றங்கள் நிகழ்வதும் அதை நாம் ஏற்றுக் கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருவதும் இன்று நேற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல் அல்ல. மாற்றங்களை நோக்கிய பயணம் எல்லா காலங்கிலும் நடைபெற்று வந்திருக்கிறது. அந்தப் பயணம்தான் புதிய படைப்புகளையும் புதுமைகளையும் கொண்ட புதிய சமுதாயத்தைப் படைக்கும். பழைமையிலேயே இருந்து கொண்டால் புதுப்பித்தலைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் ஒரு முடக்கம் ஏற்பட்டுவிடும். எப்போதும் புதியவற்றை அறிய வேண்டும் புதிய சமுதாயத்தைக் காணவேண்டும் என்ற கனவு எல்லோரிடமும் இருக்கும். நமது கனவு எண்ணமாக மாறி செயல்வடிவம் பெறும்போது சமூகமும் புதிப்பிக்கப்படக்கூடிய வாய்ப்பு உருவாகிவிடும். மாற்றம் தனிமனிதனால் ஏற்பட்டுவிடாது. ஒருங்கிணைந்து செயலாற்றினால் மட்டுமே புதிய உலகைக் காணலாம். அப்படிப்பட்ட புதிய மாற்றங்களுக்கான விதைகளாக இருப்பவை பாரதிதாசனின் பாடல்கள் ...